OLA Electric Scooter டோர் டெலிவரி வசதி – சர்வீஸ் செய்யும் வழிமுறைகள் வெளியீடு!
தற்போது இந்திய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ள ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரும் அக்டோபர் மாதத்தில் விற்பனைக்கு வர உள்ளது. இந்த விற்பனை டோர் டெலிவரி என்ற ஒரு புது முயற்சியாக மேற்கொள்ளப்பட இருக்கிறது.
ஓலா ஸ்கூட்டர்:
பிரபல ஆன்லைன் கேப் நிறுவனமான ஓலா தமிழகத்தை மையமாக கொண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து வருகிறது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக மேற்கொள்ளப்பட்டு வரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தயாரிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து இந்திய நகரங்களில் வரும் அக்டோபர் மாதம் முதல் இதன் விற்பனை துவங்க இருக்கிறது.
WhatsApp மூலம் தடுப்பூசி முன்பதிவு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
முன்னதாக ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்காக ரூ.499 மட்டும் செலுத்தி முன் பதிவு செய்துள்ள நபர்களுக்கு டோர் டெலிவரி மூலம் விநியோகம் செய்யப்பட உள்ளது. அதாவது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் S1 மற்றும் S 1 Pro உள்ளிட்ட 2 மாடல்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலைகளை பொருத்தளவு S1 வகை ரூ.99,999 எனவும் S1 Pro வகை ரூ.1,29,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த விலையானது வாகனங்களுக்கான மானியத்தை பொறுத்து மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.
TN Job “FB
Group” Join Now
வழக்கமாக ஒரு வாகனம் வாங்க வேண்டும் என்றால் அதற்கு டீலர்களை அணுக வேண்டும். ஆனால் ஓலா வாகன விநியோகத்தை பொருத்தளவு, டீலர் இல்லாமல் டோர் டெலிவரி மூலம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதன் மூலம் வாகனம் ஒருவேளை பழுதடைந்தால் அதை எப்படி சரி செய்வது எனும் குழப்பம் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்காக பயனர்கள் ஓலா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி மூலம் சர்வீஸ் தொடர்பான முன்பதிவு செய்திருக்க வேண்டும்.
இப்போது இந்த நிறுவனம் ஒரு தொழில்நுட்ப வல்லுநரை நியமித்து, வாகன உரிமையாளரின் வீட்டிற்கு அனுப்பும். அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பழுதுபார்ப்பு அல்லது பிற சேவையை வழங்குவார்கள். இது தவிர ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் செயற்கை நுண்ணறிவு போன்றதொரு முன்கணிப்பு அம்சம், வாகனங்களில் ஏற்படும் பழுதுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனத்தின் நிலையை உரிமையாளர் அவ்வப்போது அறிந்து கொள்ள முடியும். இதனிடையே ஓலா நிறுவனம் அடுத்த 3 மாதத்துக்குள் கிட்டத்தட்ட அனைத்து நகரத்திலும் எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை அமைக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.