ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.1,27,000/- ஊதியத்தில் வேலை – 60+ காலிப்பணியிடங்கள்..!
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனமானது ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Grade III & Grade V பதவிக்கு என மொத்தம் 62 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் விண்ணப்ப கட்டணம் போன்ற தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- சற்றுமுன் வெளியாகியுள்ள அறிவிப்பில், ஆயில் இந்தியா நிறுவனத்தில் Grade III & Grade V பதவிக்கு என மொத்தம் 62 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இப்பணிகளுக்கு குறைந்தபட்ச வயது வரம்பாக 18 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,27,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Gen / OBC விண்ணப்பதாரர்களுக்கு ரூ.200/- மற்றும் SC / ST / PWD / EXSM / EWS விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்றும் அறிவித்துள்ளது.
Oil India Limited விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள ஆற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.