Microsoft நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அலுவலகம் திறக்கும் தேதி மாற்றம்!
உலகளவில் கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் காரணத்தால் பெரும் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் ஊழியர்கள் நேரடியாக அலுவலகம் வரலாம் என அறிவித்துள்ளது. ஆனால் தற்போது டெல்டா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் தற்போது அந்த அறிவிப்பில் மாற்றம் செய்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம்:
உலக நாடுகளில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் முன்னணி தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் கடந்த ஒன்றரை ஆண்டாக வீடுகளில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. இதனால் அனைத்து தொழில்நுட்ப பெரு நிறுவனங்களும் தங்களின் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழுடன் நேரடியாக நிறுவனத்திற்கு வந்து பணியாற்றலாம் என தெரிவித்து.
Airtel, Jio, Vi ன் 60 நாட்களுக்கான ரீசார்ஜ் திட்டம் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
அந்த வரிசையில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் இந்த அறிவிப்பை தனது ஊழியர்களுக்கு அறிவித்தது. மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்கள் மட்டுமில்லாமல், நிறுவன வளாகத்துக்குள் வரும் விருந்தினர்கள் அனைவரும் இந்த விதியை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தது. ஏற்கனவே செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி மீண்டும் அலுவலகம் தொடங்கலாம் என்ற முடிவில் இந்த நிறுவனம் இருந்தது. ஆனால் தற்போது டெல்டா வைரஸ் தாக்கம் காரணமாக அலுவலகம் திறக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி அக்டோபர் 4 ஆம் தேதிக்கு மேல் இந்த நிறுவனம் திறக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல் நலக்கோளாறு அல்லது மருத்துவ காரணத்துக்காக, கட்டாயமாக தடுப்பூசி செலுத்தி கொள்வதில் இருந்து விலக்கு பெற்றவர்களுக்கு, நிறுவனமும் விலக்கு வழங்கி உள்ளது. அதுமட்டுமல்லாமல் நிறுவன ஊழியர்களுக்கு, தடுப்பூசி செலுத்தக்கூடிய வயதை விட குறைவான வயது குழந்தைகள் இருந்தால், அவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என அறிவித்துள்ளது. அதேபோல, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு கொண்டவர்களைப் பராமரிக்கும் ஊழியர்களும், ஜனவரி வரை வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என தெரிவித்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
மைக்ரோசாப்ட் நிறுவனம் போலவே, கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களும் கடந்த மாதமே இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் பெரும்பான்மையான ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே பணிபுரியும் வசதியை வழங்கி இருந்தாலும், ஒரு சிலர் மட்டும் தற்போது அலுவலகத்தில் இருந்து பணிபுரிவதால் பெரிய எண்ணிக்கையிலான ஊழியர்களுக்கு அலுவலகம் திறக்க, முயற்சிகளை இந்த நிறுவனங்கள் எடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்று இருந்தால் மட்டுமே ஊழியர்கள் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து பணியாற்ற முடியும் என கட்டாயம் தெரிவித்துள்ளது. ஆனால் தடுப்பூசி பெருமளவு கிடைக்கும் இடங்களில் மட்டுமே இது பொருந்தும் என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.