TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – 36 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!

0
TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - 36 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - 36 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!
TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – 36 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழக இந்து சமய அறநிலையத்துறையில் கிரேடு 4 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான தேர்வு முறை, விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

TNPSC காலிப்பணியிடங்கள்:

தமிழகம் கொரோனா மூன்றாம் அலையிலிருந்து மீண்டு வரும் நிலையில் அரசு மற்றும் தனியார் துறைகள் வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தனியாரை தொடர்ந்து அரசுத்துறையும் காலிப்பணியிடங்களை வெளியிட்டு வருகிறது. அதற்கான TNPSC போட்டித் தேர்வுகளையும் தேர்வாணையம் அறிவித்தது. அதன்படி குரூப் 2, குரூப் 4 தேர்வு அறிவிப்பு வெளியானது. தற்போது குரூப் 2 முதல்நிலை தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பதையொட்டி மீண்டும் முழு ஊரடங்கு? பரபரப்பு கடிதம்!

அடுத்ததாக குரூப் 4 தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 36 நிர்வாக அலுவலர் கிரேடு 4 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும். அடுத்ததாக 25 வயது முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. அதன்படி தகுதியும், விருப்பமும் உடையவர்கள்  http://www.tnpscexams.in என்ற இணையதளம் வாயிலாக ஜூன் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download

இதற்கான தேர்வு கட்டணமாக ரூ. 100 செலுத்த வேண்டும். மேலும் நிரந்தர பதிவு வைத்திருப்பவர்களுக்கு கட்டணம் கிடையாது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாளின் முதல் பிரிவு தமிழ் மொழித் தகுதித் தேர்வு இதில் 100 வினாக்கள் இடம்பெறும். இரண்டாம் பிரிவில் பொது அறிவில் 75 வினாக்களும், கணிதப்பகுதியில் 25 வினாக்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். இரண்டாம் தாளில் இந்து மதம், சைவம் மற்றும் வைணவம் பாடப்பிரிவுகளில் இருந்து 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!