தமிழகத்தில் 8வது படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் 8வது படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 8வது படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் 8வது படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், அலுவலக உதவியாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் அனுப்புவதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள “மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய அதிகாரி” பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான மாவட்ட வாரியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

  • அமைப்பு – மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்.
  • பதவியின் பெயர் – அலுவலக உதவியாளர்.
  • காலியிட எண்ணிக்கை – பல்வேறு பணியிடங்கள் உள்ளன.
  • பணியிடம் – தமிழகம் முழுவதும்
  • விண்ணப்பதாரர் கல்விதகுதி – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

  • விண்ணப்பிக்கும் முறை – ஆஃப்லைன்.
  • அதிகாரப்பூர்வ இணையதளம் – மாவட்டத்தை பொறுத்து மாறுபடும்.
  • விண்ணப்பிக்க கடைசி தேதி – 28.03.2022 (மாவட்டத்தை பொறுத்து மாறுபடும்).
  • விண்ணப்பதாரர் வயது வரம்பு – 18 முதல் 34 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி, குறிப்பிட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
  • தேர்வு முறை – தகுதியானவர் எழுத்துத் தேர்வு, தனிப்பட்ட நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் குறிப்பிட்ட அரசு சார்ந்த அமைப்பு வழங்கிய அடையாள அட்டை, கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், முன்னுரிமை தகுதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களில் கையெழுத்திட்டு விண்ணப்பப் படிவத்துடன் இணைக்க வேண்டும். விண்ணப்பப்படிவத்தை “தலைவர், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், XXX – 0000” என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கலாம். XXX என்பதில் மாவட்டமும், 000 – என்பதில் அஞ்சல் குறியீட்டு எண்ணையும் நிரப்பவும். மேலும் இது குறித்த விவரங்களுக்கு மாவட்ட வாரியாக அறிவிப்பை பார்வையிடுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

1. மாவட்டம் : திருச்சி https://tiruchirappalli.nic.in
2. மாவட்டம் : கோவை https://coimbatore.nic.in/
3. மாவட்டம் : கரூர் https://karur.nic.in/
4. மாவட்டம் : திருப்பூர்  https://tiruppur.nic.in/
5. மாவட்டம் : தூத்துக்குடி https://thoothukudi.nic.in/
6. மாவட்டம் : சிவகங்கை https://sivaganga.nic.in
7. மாவட்டம் : தஞ்சாவூர் https://thanjavur.nic.in
8. மாவட்டம் : கடலூர் https://cuddalore.nic.in/
9. மாவட்டம் : திருவள்ளூர் https://tiruvallur.nic.in/
10. மாவட்டம் : நாகப்பட்டினம்  https://www.nagapattinam.nic.in/
11. மாவட்டம் : திருவண்ணாமலை https://tiruvannamalai.nic.in/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!