புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு – 4% அகவிலைப்படி உயர்வு!

0
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு - 4% அகவிலைப்படி உயர்வு!
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு - 4% அகவிலைப்படி உயர்வு!
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு – 4% அகவிலைப்படி உயர்வு!

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டு பெரும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகளை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதையடுத்து கொரோனா பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு படிப்படியாக அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அதிகரித்து வரும் விலைவாசியை எதிர்கொள்ள அனைத்து மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படியானது உயர்த்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியானது 4% உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அமைச்சரவையிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜனவரி மாதம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் கடந்த 8ம் தேதி முதல் புதுச்சேரி அரசு ஊழியா்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்தை தாக்கும் புதிய வைரஸ்கள் – என்ன தான் காரணம்? உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் புதுச்சேரி அரசு ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதில் தற்போது குடும்ப ஓய்வூதியத்திற்கான அகவிலைப்படியானது 34 சதவீதமாக வழங்கப்பட்டு வருவதை 4% உயர்த்தி 38 சதவீதமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த ஜூலை 1ம் தேதியிலிருந்து அமல்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையானது புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதி நிர்வாகத் தலைமை அதிகாரிகள் மற்றும் அரசு சார்பு துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!