நவ.28ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – அரசு அனுமதி!

0
நவ.28ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு - அரசு அனுமதி!
நவ.28ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு - அரசு அனுமதி!
நவ.28ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – அரசு அனுமதி!

தேசிய தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் தற்போது மேம்பட்டு வரும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் வரும் நவ.28ம் தேதி முதல் மீண்டுமாக திறக்கப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு

சமீபத்தில் தேசிய தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாடு காரணமாக கிட்டத்தட்ட 10 நாட்களாக பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. அதே போல அரசு வாகனங்கள், லாரிகளின் இயக்கத்திற்கும் டெல்லி அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் தற்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நகரின் மாசுபாடு குறித்து உச்ச நீதிமன்றத்தில் சில முக்கியமான கருத்துக்களை வழங்கிய நிலையில், காற்றின் நிலைமை தற்போது சீரடைந்ததால் சில தடைகளை நீக்குமாறு அரசுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

அரசின் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கல் – சட்டத்திருத்த மசோதா!

இதை தொடர்ந்து ‘டெல்லியில் காற்றின் தரம் தற்போது மேம்பட்டு வருகிறது. இதன் மூலம் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் வரும் திங்கள்கிழமை (நவ.28) முதல் மீண்டும் திறக்கப்படும்’ என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், தேசிய தலைநகரில் காற்றின் தரம் ஓரளவு மேம்பட்டிருந்தாலும், அது இன்னும் மிகவும் மோசமான பிரிவில் தான் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 டோஸ் தடுப்பூசி செலுத்தினால் மதுபான விலையில் 10% தள்ளுபடி – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

இதையடுத்து அனைத்து அரசு அலுவலகங்களும் திங்கள்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என்றும் ஊழியர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களுக்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல டெல்லியில் தொடர்ச்சியான கட்டுப்பாடுகள் மூலம் காற்று மாசுபாடு ஓரளவு குறைந்திருக்கும் சூழலில் கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு நீக்கியது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here