இந்தியாவில் இனி கோதுமை ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசு அறிவிப்பு!

0
இந்தியாவில் இனி கோதுமை ஏற்றுமதிக்கு தடை - மத்திய அரசு அறிவிப்பு!
இந்தியாவில் இனி கோதுமை ஏற்றுமதிக்கு தடை – மத்திய அரசு அறிவிப்பு!

இந்தியாவில் கோதுமை, ரவை, மைதா ஆகிய உணவு பொருட்களை மக்கள் அதிக அளவில் உண்ணுகின்றனர். அதனால் இதன் தேவை அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இதன் விலை உயர்வு மக்களுக்கு பொருளாதார சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இதனை சரி செய்ய மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏற்றுமதிக்கு தடை:

இந்தியாவில் வட மாநிலங்களில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படும் கோதுமை மற்றும் அதிலிருந்து கிடைக்கும் ரவை, மைதா ஆகிய பொருட்களால் செய்யப்பட்ட உணவு பொருட்களை மக்கள் அதிகம் உண்கின்றனர். இது நம் நாட்டை பொறுத்தவரை ஒரு வகையான கலாச்சார உணவு வகைகளாகவும் இருந்து வருகிறது. மேலும் அன்றாட சமையலில் இந்த மூன்று பொருட்களும் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகவும் தீவிரமாக நடந்த ரஷ்யா – உக்ரைன் போரால் சர்வதேச சந்தையில் கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

முடிவுக்கு வரும் TCS நிறுவனத்தின் WFH முறை – முக்கிய அறிவிப்பு!

இந்த நேரத்தில் இந்தியாவில் இருந்து சுமார் 70 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதனால் உள்நாட்டில் கோதுமைக்கு தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாக கோதுமையின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. தற்போது கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்படும் மைதா மற்றும் ரவை, முழு கோதுமை மாவு ஆகிய பொருட்களை ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து ஆகஸ்ட் 25-ம் தேதி நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகரித்து வரும் கோதுமையின் விலை உயர்வை தடுக்க மத்திய அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நாட்டில் 2021 – 2022 ம் நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோதுமை மாவு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய அறிவிப்பால் கோதுமை பயிர் உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கோதுமை தேக்கம் அடைந்து விடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. மறுபுறம் இந்தியாவில் கோதுமையின் விலை இயல்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here