இனி வார இறுதி ஊரடங்கு உத்தரவு கிடையாது – முதல்வர் முக்கிய முடிவு!

0
இனி வார இறுதி ஊரடங்கு உத்தரவு கிடையாது - முதல்வர் முக்கிய முடிவு!
இனி வார இறுதி ஊரடங்கு உத்தரவு கிடையாது - முதல்வர் முக்கிய முடிவு!
இனி வார இறுதி ஊரடங்கு உத்தரவு கிடையாது – முதல்வர் முக்கிய முடிவு!

டெல்லியில் தற்போது கொரோனா நோய் தொற்று பாதிப்பின் அலை குறைந்து வருவதால் தற்போது அமலில் இருந்து வரும் வார இறுதி தளர்த்துவது தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு ரத்து

நாடு முழுவதும் கொரோனா 3ம் அலை தொற்றின் பரவல் வேகமெடுத்து வந்தபோது பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த வகையில் ஆரம்பம் முதலே கொரோனா தொற்றின் தினசரி வழக்குகளின் நிமித்தம் அதிகம் பாதிக்கப்பட்டு வந்த தேசிய தலைநகர் டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தற்போது நோய் தொற்று விகிதம் சரியத் துவங்கி இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மகாராஷ்டிரா மாநில அரசு வரும் ஜனவரி 24ம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை துவங்குவதாக அறிவித்திருக்கிறது.

IND vs SA 2nd ODI: தினேஷ் கார்த்திக்கின் பிளேயிங் 11 இதுதான்! கூடுதல் பௌலர்களுக்கு வாய்ப்பு!

இதனை தொடர்ந்து கொரோனா வழக்குகள் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு தேசிய தலைநகர் டெல்லியில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 5 மணி வரை அமலில் இருந்து வந்த ஊரடங்கு உத்தரவை நீக்க டெல்லி அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பொது இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த ஒற்றைப்படை-இரட்டை எண்ணிக்கையில் செயல்பட அனுமதிக்கப்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இனி வாரத்தின் அனைத்து நாட்களிலும் திறந்திருக்கலாம்.

தமிழகத்தில் நாளை (ஜன.22) பள்ளிகளுக்கு விடுமுறை – கல்வி ஆணையர் அறிவிப்பு!

மேலும் தனியார் அலுவலகங்கள் WFH முறைக்கு மாற்றப்படும் அல்லது முடிந்தவரை 50 சதவீத வருகையுடன் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக டெல்லியில் வார இறுதி ஊரடங்கு சட்டத்தின் போது, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் அவசர கால சூழ்நிலையை எதிர் கொள்பவர்கள் மட்டுமே அரசாங்க அனுமதி சீட்டுகள் அல்லது செல்லுபடியாகும் அடையாள அட்டைகளுடன் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. தவிர மளிகை பொருட்கள், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here