பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு அல்ல – கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!
புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளை திறப்பது குறித்து இன்று அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு குறித்து விளக்கம் :
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்களும் மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் கலந்தலோசித்து வருகிறது. முதற்கட்டமாக 9 வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பஞ்சாப் அரசு இன்று முதல் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் கடந்த ஒரு வருடங்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
ஆகஸ்ட் 6 முதல் 20 வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு – பிலிப்பைன்ஸ் அரசு உத்தரவு!
மாநிலங்களை தொடர்ந்து யூனியன் பிரதேசங்களிலும் பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதன் படி புதுச்சேரியில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100 கும் கீழ் குறைந்துள்ளதால் இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் இன்று அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரைந்த பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும். பள்ளிகளை தொடர்ந்து கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நிலையில் குழந்தைகளுக்கு இன்னும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரவில்லை. கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்திய பிறகு தான் கல்லூரிகள் திறக்க வாய்ப்புள்ளது. இத்தகைய சூழ்நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது என்பது சாத்தியமில்லை. இது குறித்து ஆகஸ்ட் 15க்கு பிறகு மீண்டும் ஆலோசிக்கப்படும், அதன் பிறகு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.