அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது – திடீர் அறிவிப்பு!

0
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது - திடீர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது - திடீர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது – திடீர் அறிவிப்பு!

பாகிஸ்தானில், புதிய பிரதமாராக பதவியேற்றிருக்கும் ஷெஹ்பாஸ் ஷெரீப் முதல் நாளில் அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இருப்பினும் நாட்டில் தலைக்கு மேல் கடன் சுமை உள்ளதால், அடுத்த நாளே அந்த அறிவிப்பை திரும்பப்பெறும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டதால், மீண்டும் ஊதியத்தை அதிகரிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சம்பள உயர்வு கிடையாது:

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றன. பெரும்பான்மையை இழந்த அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்), பாகிஸ்தான் மக்கள் கட்சி உட்பட 11 எதிர்க்கட்சிகள் இம்ரான் கானுக்கு எதிராக கைகோர்த்தன. மேலும் பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பதவியேற்ற முதல் நாளிலேயே அரசு அலுவலர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட இரண்டு வார விடுமுறைக்கு பதில் இனி ஒரு நாள் தான் என அறிவித்தார். இதையடுத்து பிரதமர் அலுவலக வேலை நேரத்தை காலை 8 மணியாக மாற்றி அறிவித்தார்.

தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – இறுதித்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு!

இதையடுத்து பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆற்றிய நாடாளுமன்றத்தின் முதல் உரையில் அரசுப் பணியாளர்களின் ஊதியங்கள், ஓய்வூதியங்களை உயர்த்துவதாக அறிவித்தார் என்று எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலின் படி, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.25,000 ஆகவும், ஓய்வு பெற்ற பாகிஸ்தான் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 10% உயர்த்தப்படும் என்று ஷெரீப் அறிவித்திருந்தார். அதோடு, 1 லட்சத்துக்கும் குறைவான ஊதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் சம்பளம் உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். மேலும் பிரதமர் நாட்டின் பொருளாதாரத்தை இம்ரான் அரசு சீரழித்து விட்டதாக குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் அடுத்த நாளே, இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டதாக கூறியுள்ளார். இதற்கு காரணம் என்னவென்றால் அரசு ஊழியர்களின் சம்பளம் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் உயர்த்தப்பட்ட நிலையில், அரசு ஊழியர்களின் சம்பளத்தை மீண்டும் உயர்த்தவில்லை என்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) மூத்த தலைவர் மிஃப்தா இஸ்மாயில் தெரிவித்தார். இது குறித்து இஸ்மாயில் வெளியிட்ட செய்தி குறிப்பில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை உயர்த்துதுவதாகவும், அடுத்த பட்ஜெட்டில் சம்பள பிரச்சினை நிச்சயமாக பரிசீலிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். சீனா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐஎம்எப் என பல நாடுகளில் இருந்து வாங்கிய கடனுக்குக் கொடுக்கப்படும் வட்டியால் பாகிஸ்தானின் நிதி நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது என கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!