தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – அதிரடி அறிவிப்பு வெளியீடு!

0
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - அதிரடி அறிவிப்பு வெளியீடு!
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியர்கள் கவனத்திற்கு - அதிரடி அறிவிப்பு வெளியீடு!
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – அதிரடி அறிவிப்பு வெளியீடு!

கேரள மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் RT PCR பரிசோதனை செய்து வாரம் ஒருமுறை சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

RT PCR பரிசோதனை:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்று தற்போது தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும் பல்வேறு பகுதிகளில் உருமாறிய கொரோனா பெருந்தொற்று பரவிய நிலையில் இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஒமைக்ரான் மிகவும் பாதிப்பு ஏற்படுத்தும் வீரியத்துடன் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு – ‘இனி முன்பதிவு தேவையில்லை’! தெற்கு ரயில்வே!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த தொற்று தற்போது 12 நாடுகளில் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் அனைத்து நாடுகளும் கொரோனா கட்டுப்பாடுகளை பலப்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அதிகம் பரவி வரக்கூடிய கேரள மாநிலத்தில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் இருந்து வருவதாக அம்மாநில முதல்வர் தகவல் வெளியிட்டுள்ளார்.

டிசம்பர் மாத ஊரடங்கிற்கான புதிய வழிகாட்டுதல்கள் – மாநில அரசு வெளியீடு!

அனைவரும் தடுப்பூசி செலுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகளை அம்மாநில முதல்வர் மேற்கொண்டு வருகிறார். எனினும் மதத்தை காரணம் காட்டி 5000 ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருந்து வருகின்றனர். அவ்வாறு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாரம் ஒரு முறை தங்களது சொந்த செலவில் RT PCR பரிசோதனை செய்து அதற்கான சான்றிதழை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!