டிசம்பர் மாத ஊரடங்கிற்கான புதிய வழிகாட்டுதல்கள் – மாநில அரசு வெளியீடு!

0
டிசம்பர் மாத ஊரடங்கிற்கான புதிய வழிகாட்டுதல்கள் - மாநில அரசு வெளியீடு!
டிசம்பர் மாத ஊரடங்கிற்கான புதிய வழிகாட்டுதல்கள் - மாநில அரசு வெளியீடு!
டிசம்பர் மாத ஊரடங்கிற்கான புதிய வழிகாட்டுதல்கள் – மாநில அரசு வெளியீடு!

ஒடிசா மாநிலத்தில் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகளில் டிசம்பர் மாதத்திற்கான புதிய வழிகாட்டுதல்கள் அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முன்னதாக அமலில் இருந்த கொரோனா ஊரடங்கு ஆன தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதல்கள்:

ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்று 2 ம் அலை பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில், தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. பாதிப்புகள் குறைய தொடங்கிய பிறகு, படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கடந்த சில மாதங்களாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று டிசம்பர் மாதத்திற்கான புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவிப்புகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. மேலும், முன்னதாக அமலில் இருந்த இரவு ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாக மீண்டு வந்த நடிகர் கமல் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

ஒடிசா மாநில சிறப்பு நிவாரண ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் டிசம்பர் 1 ஆம் தேதியான இன்று காலை 5 மணி முதல் 2022 ஜனவரி 1 ஆம் தேதி காலை 5 மணி வரை அமலில் இருக்கும். மேலும், மாநிலத்தின் அனைத்து நகர்ப்புறங்களிலும் ‘இரவு ஊரடங்கு உத்தரவு’ தினமும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து வகையான கடைகள், மால்கள் தினமும் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். இருப்பினும், அனைத்து சமூக, மத மற்றும் அரசியல் கூட்டங்கள் மற்றும் கண்காட்சிகள், வர்த்தக கண்காட்சிகள் மற்றும் மேளாக்கள் ஆகியவை செய்யப்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெல்லிசை, ஆர்கெஸ்ட்ரா/ ஜாத்ரா/ ஓபரா, நடனங்கள்-கிளாசிக்கல், நாட்டுப்புற மற்றும் பிற அனுமதிக்கப்பட்ட நடன வடிவங்கள், கலாச்சாரப் போட்டிகள், திறந்தவெளி அரங்குகள்/ நாடகம்/ நுக்கத் நாடகம்/ தெரு நாடகங்கள்/ இதுபோன்ற நிகழ்ச்சிகள் போன்ற கலாச்சாரக் கூட்டங்கள்/ நிகழ்ச்சிகள் உரிய கோவிட் தடுப்பு நெறிமுறைகளுடன் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31, 2021 மற்றும் ஜனவரி 1, 2022 அன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஹோட்டல்கள், உணவகங்கள், கிளப்புகள், பூங்காக்கள், மாநாட்டு அரங்குகள் மற்றும் கல்யாண மண்டபங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கூட்டம் கூட்டுவது மாநிலம் முழுவதும் தடை செய்யப்படும்.

புதிய தளர்வுகள்:

  • ஆடிட்டோரியங்கள் உரிய கோவிட் தடுப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்படும்.
  • திறந்தவெளி திரையரங்குகள் COVID-19 பாதுகாப்பு நெறிமுறைகளுடன் உள்ளூர் அதிகாரிகளின் கவனத்திற்கு உட்பட்டு, இடத்தின் அளவை கருத்தில் கொண்டு கலந்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் அனுமதிக்கப்படும்.
  • உட்புற அரங்குகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை மண்டபத்தின் இருக்கை திறனில் 50% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது.
  • சினிமா அரங்குகள், திரையரங்குகள் 50% திறனுடன் கோவிட் தடுப்பு வழிமுறைகளுடன் திறக்க அனுமதிக்கப்படும்.
  • திருமணங்கள், இறுதிச் சடங்குகள் போன்ற நிகழ்வுகளில் உள்ளூர் அதிகாரிகளின் ஒப்புதலுடன் விருந்தினர்கள், பாதிரியார்கள் மற்றும் கேட்டரிங் மற்றும் பிற துணைப் பணியாளர்கள் உட்பட அதிகபட்சம் 250 நபர்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!