2023 ஆம் ஆண்டு வரை புதிய வேலைவாய்ப்புகள் இல்லை – ஆப்பிள் நிறுவனம் அதிரடி!

0
2023 ஆம் ஆண்டு வரை புதிய வேலைவாய்ப்புகள் இல்லை - ஆப்பிள் நிறுவனம் அதிரடி!
2023 ஆம் ஆண்டு வரை புதிய வேலைவாய்ப்புகள் இல்லை - ஆப்பிள் நிறுவனம் அதிரடி!
2023 ஆம் ஆண்டு வரை புதிய வேலைவாய்ப்புகள் இல்லை – ஆப்பிள் நிறுவனம் அதிரடி!

உலகளவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க பல முன்னணி நிறுவனங்கள் புதிய பணியாளர்களை நியமிப்பதை நிறுத்தி இருக்கிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை ஆப்பிள் நிறுவனம் பணியமர்த்தலை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

புதிய வேலைவாய்ப்பு:

பல நாடுகளில் கொரோனா காலகட்டத்திற்கு பின் ஏகப்பட்ட பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நிலைமையை சரி செய்ய, பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் அளவை குறைத்து வருகிறது. அது மட்டுமில்லாமல் புதிய பணியமர்த்தலை நிறுத்தி இருக்கிறது. அந்த வரிசையில் பல மாதங்களுக்கு புதிய நபர்களை பணியமர்த்த மாட்டோம் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடைமுறை 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நீடிக்கப்படலாம் என தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்பின் புதிய Communities வசதி – இனி சாட்டிங் ரெம்ப ஈஸி! செயலியில் வந்துள்ள சூப்பர் அப்டேட்!

Exams Daily Mobile App Download

இது குறித்து பிசினஸ் இன்சைடர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி ஆப்பிள் நிறுவனம் பொருளாதாரச் சூழல் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து பணியமர்த்தல்களையும் இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. சில செலவைச் சேமிக்க ஆப்பிள் ஏற்கனவே இந்த ஆண்டு இதேபோன்ற முடிவை எடுத்துள்ளது, இப்போது அதை நீட்டிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலமாக ஆப்பிள் நிறுவனம் எதிர்காலத்தில் நல்ல மதிப்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை என ஆப்பிள் நிறுவன உயர் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!