வாட்ஸ் அப்பின் புதிய Communities வசதி – இனி சாட்டிங் ரெம்ப ஈஸி! செயலியில் வந்துள்ள சூப்பர் அப்டேட்!

0
வாட்ஸ் அப்பின் புதிய Communities வசதி - இனி சாட்டிங் ரெம்ப ஈஸி! செயலியில் வந்துள்ள சூப்பர் அப்டேட்!
வாட்ஸ் அப்பின் புதிய Communities வசதி - இனி சாட்டிங் ரெம்ப ஈஸி! செயலியில் வந்துள்ள சூப்பர் அப்டேட்!
வாட்ஸ் அப்பின் புதிய Communities வசதி – இனி சாட்டிங் ரெம்ப ஈஸி! செயலியில் வந்துள்ள சூப்பர் அப்டேட்!

பிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ் அப் பயனர்களை கவரும் வகையில் முக்கிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வந்துள்ள அப்டேட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த முக்கிய அப்டேட் என்னவென்று இப்பதிவில் காண்போம்.

வாட்ஸ் அப் குழு:

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ் அப் செயலியை பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தகவல் பரிமாற்றத்திற்கும் மற்றும் கோப்புகளை பிறருக்கு அனுப்புவதற்கும் வாட்ஸ் அப் பேருதவியாக இருந்து வருகிறது. மக்களின் விரும்பத் தகுந்த செயலியான வாட்ஸ் அப் செயலியில் பயனர்களுக்கு கூடுதல் நன்மைகளை அளிக்கும் விதமாக புதிய அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. இதனால் வாட்ஸ் அப்பை பயன்படுத்துவது மேலும் எளிதாகி வருகிறது.

Exams Daily Mobile App Download

முக்கிய அப்டேட்டாக அண்மையில் வாட்ஸ் அப் குழுவில் சேர்க்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. அதன்படி 256 இருந்த எண்ணிக்கை 512 ஆக உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது இந்த எண்ணிக்கை மேலும் உயர்த்தப்பட்டு இனி வாட்ஸ் அப் குரூப்பில் அதிகபட்சமாக 1024 உறுப்பினர்கள் வரை இணையும் படி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் முதலில் வாட்ஸ் அப் பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.

கூகுளின் வேற லெவல் திட்டம் .. உலகளவில் பேசப்படும் 1000 மொழிகளுக்கான AI உருவாக்கம்!

Follow our Instagram for more Latest Updates

தற்போது இந்த வசதி அனைவருக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இனி பீட்டாவை தொடர்ந்து Android மற்றும் iOS வாட்ஸ் அப் பயனர்கள் குழுவிலும் 1024 பேர் வரை இணையலாம். அதனை தொடர்ந்து குழுவிற்குள் வாக்கெடுப்பு நடத்தும் அம்சமும் வந்துள்ளது. அடுத்தாக இனி வாட்ஸ் அப்பில் 2ஜிபி வரை ஃபைல்களை அனுப்ப முடியும் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது. தற்போது வாட்ஸ் அப்பில் கம்யூனிட்டி ஆப்ஷன் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பல குரூப்களை இணைக்க முடியும். மேலும் ஒரு குரூப்பில் இருந்து தகவல்களை எளிதாக பெற முடியும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!