நாடு முழுவதும் இனி UPI பணபரிவர்த்தனை செய்ய கட்டணம் – RBI ஆலோசனை !

7
நாடு முழுவதும் இனி UPI பணபரிவர்த்தனை செய்ய கட்டணம் - RBI ஆலோசனை !
நாடு முழுவதும் இனி UPI பணபரிவர்த்தனை செய்ய கட்டணம் - RBI ஆலோசனை !
நாடு முழுவதும் இனி UPI பணபரிவர்த்தனை செய்ய கட்டணம் – RBI ஆலோசனை !

நாடு முழுவதும் மக்கள் பலர் யுபிஐ மூலமாக பணபரிவர்த்தனைகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பின் படி யுபிஐ மூலமாக பணபரிவர்த்தனை செய்ய கட்டணம் வசூலிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

யுபிஐ பரிவர்த்தனை

கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மக்கள் யுபிஐ மூலமாக பணபரிவர்த்தனைகள் செய்யும் வசதியை ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தொடங்கி வைத்தார். முன்னதாக கிரடிட் கார்ட், டெபிட் கார்ட் பரிவர்த்தனைகளை விட யுபிஐ பரிவர்த்தனைகள் சுலபமாக இருப்பதால் மக்கள் பலர் அதனை பயன்படுத்துகின்றனர். யுபிஐ பரிவர்த்தனை சேவை பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் 600 கோடி ரூபாய் யுபிஐ பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பெருமையாக பேசி இருக்கிறார். யுபிஐ பரிவர்த்தனை செய்ய எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. அதனால் கூட மக்கள் பலர் அதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் யுபிஐ சேவை விதியில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் படி ரிசர்வ் வங்கி யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து தனது பங்குதாரர்களிடம் கருத்து கேட்டுள்ளது.

தமிழகத்தில் 1.07 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் – முதல்வர் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

மேலும் யுபிஐ பரிவர்த்தனைகளில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிப்பது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டதாவது, யுபிஐ என்பது ஐஎம்பிஎஸ் போன்றது, எனவே ஐஎம்பிஎஸ்ல் உள்ள கட்டணங்களை போலவே யுபிஐ பண பரிவர்தனைகளுக்கு கட்டணங்கள் இருக்க வேண்டும். வெவ்வேறு தொகை வரம்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட கட்டணம் விதிக்கப்படலாம். அவ்வாறு பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் RBI அதன் கொள்கைகளை கட்டமைக்க மற்றும் நாட்டில் பல்வேறு கட்டண சேவைகள் செயல்பாடுகளுக்கான கட்டணங்களின் கட்டமைப்பை ஒழுங்குபடுத்த முயற்சிக்கும். இந்த விவகாரத்தில் RBI முடிவு எடுக்கவில்லை அல்லது எந்த கருத்தையும் கொண்டிருக்கவில்லை என வலியுறுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது .

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

7 COMMENTS

  1. UPI பரிவர்த்தனைக்கு கட்ணம் நிர்னயித்தால் வணிகர்கள் நிச்சயமாக UPI பரிவர்த்தனைகளை நிச்சயமாக புரக்கனிப்பர் அல்லது விதிக்கப்படும் கட்டணத்தை வாடிக்கையாளரிடம் வசூலிப்பார்கள். எப்படி பார்த்தாலும் பாதிக்கப்படுவது பொது மக்கள்தான். ஆகவே UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் நிர்ணயிக்க கூடாது இது நிச்சயமாக மக்களை பாதிக்கும்

  2. வணிகர்கள் சேவைகட்டணத்தை வாடிக்கையாளரிடம் வசூலிப்பார்கள். எப்படி பார்த்தாலும் பாதிக்கப்படுவது பொது மக்கள்தான். ஆகவே UPI பரிவர்த்தனைக்கு கட்டணம் நிர்ணயிக்க கூடாது இது நிச்சயமாக மக்களை பாதிக்கும்.எல்லாவகையிலும் பொதுமக்களை கஷ்டப்படுத்த இப்படிஎல்லாம் ரிசர்வ் வங்கி யோசிக்கிறது.கொடுமை.

    Reply

  3. மக்கள் பணத்தை எப்படி எல்லாம் பெற முடியுமோ அப்படி எல்லாம் வசூல் செய்வது நோக்கமாக தெரிகிறது

  4. Digital India சொல்லிட்டு இப்படி பண்ணுன மற்படியம் மக்கள் பணத்தை கையில் edukka வேண்டி இருக்கும் இப்ப தான் மக்கள் ஆன்லைன் payment use பண்ண start பண்ணிருகாங்க but கட்டணம் போட்டா எல்லாரும் old நிலைமைக்கு poga வேண்டி தான்

  5. ஆரம்பத்தில் இப்படி போக போக பழகிடும்GST மாதிரி

  6. GS T. மாதிரி பழகிடும் ல
    மக்களை முட்டாள் ஆக்க
    புது வழி

  7. UPIஐ க்கு கட்டணம் விதித்தால்
    ஏழைகள் மிகவும் பாதிப்புக்குள்ளாவார்கள்.
    சில்லரை தட்டு பண்பாடு ஏற்படும்.பழையபடி ரொக்க நடவடிக்கைதான் கை கொடுக்கும்.
    டிஜிட்டல் அம்பேல்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!