NMMS 2024 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு – முழு விவரங்கள் இதோ!

0
NMMS 2024 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - முழு விவரங்கள் இதோ!

தமிழகத்தில் 08ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகைக்கான NMMS 2024 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது.

NMMS 2024 முடிவுகள்:

தமிழக பள்ளிகளில் 08ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கல்விக்கு உதவும் விதமாக தேசிய வருவாய் மொழி மற்றும் தகுதி படிப்புதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையை பெறுவதற்கு தகுதியான நபர்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககதால் நடத்தப்படும் NMMS தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த வகையில் இக்கல்வி ஆண்டிற்கான (2023 – 2024) NMMS தேர்வானது 03.02.2024 அன்று நடைபெற்றது. இத்தேர்வில் சுமார் 2,25,490 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

  CMC வேலூர் கல்லூரியில் Senior Resident வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

இத்தேர்வுக்கான முடிவுகள் இன்று (28.02.2024) மாலை 4.00 மணியளவில் வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள NMMS Examination முடிவுகள் பிப்ரவரி 2024 என்ற பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை சரியாக உள்ளிடுவதன் மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் உதவித்தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியல் National Means cum Merit Scholarship Scheme Examination என்ற பக்கத்தில் அதே இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!