NLC நிறுவனத்தில் 675 காலிப்பணியிடங்கள் 2021 – ஆன்லைன் பதிவுகள் தொடக்கம்!!
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான NLC India Limited நிறுவனத்தில் தொழிற்பழகுநர் சட்டத்திற்கு உட்பட்டு Fitter, Electrician, Welder, Mechanic, Carpenter, Plumber, Accountant, Medical Lab Technician Pathology & Medical Lab Technician Radiology உள்ளிட்ட பல பணிகளுக்காக பயிற்சி பெற புதிய அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டது. மொத்தம் 675 காலியிடங்களை கொண்ட இந்தப் பணிகளுக்கு தற்போது ஆன்லைன் பதிவுகள் தொடங்கி உள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NLC கல்வித்தகுதி :
- Apprentice பணிகள் – அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ITI தேர்ச்சியுடன் NCVT/DGET சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- PASAA Trade – COPA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Accountant – 2019 / 2020 / 2021 ம் வருடத்தில் B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Data Entry Operator – 2019 / 2020 / 2021 ம் வருடத்தில் B.Sc.(Comp.Sc.) / BCA முடித்திருக்க வேண்டும்.
- Assistant(HR) – 2019 / 2020 / 2021 ம் வருடத்தில் BBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
NLC வேலைவாய்ப்பு விவரங்கள் :
- விண்ணப்பதாரர்கள் 01.10.2021 தேதியில் 14 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் ரூ.8,766/- முதல் அதிகபட்சம் ரூ.12,524/- வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
- பதிவாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமை படைத்தோர் 16.08.2021 அன்று முதல் 25.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இனைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதற்கான ஆன்லைன் பதிவுகள் தற்போது தான தொடங்கியுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொகுதிகளின் படி இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் பதிவு செய்ய :
- அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- விண்ணப்பதாரர் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் பணிக்கான அறிவிப்பு பக்கத்தில் விண்ணப்ப பகுதியினை காணலாம்.
- விண்ணப்பதாரர்கள் அடிப்படை தகவலை பூர்த்தி செய்து அனைத்து ஆவணங்களையும் பூர்த்தி செய்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
- தகுதி, அடையாள சான்று, முகவரி தகவல் மற்றும் அடிப்படையில் புகைப்படம், கையொப்பம் மற்றும் பிற ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும்.
- அனைத்து பணிகளையும் முடித்த பின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
- இறுதியாக சமர்ப்பிக்கப்பட்ட படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.