NIT திருச்சியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – BE / B.Tech தேர்ச்சி..!
திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ஆனது சற்றுமுன் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Research Fellow பதவிக்கு என காலியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | National Institute of Technology (NIT Trichy) |
பணியின் பெயர் | Junior Research Fellow |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NIT Trichy காலிப்பணியிடம்:
தற்போது வெளியிடப்பட்ட திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் அறிவிப்பில், Junior Research Fellow பதிவிக்கென்று மொத்தமாகவே ஒரே ஓரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
NIT Trichy கல்வித் தகுதி:
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் / பல்கலைக்கழகம் / கல்லூரிகளில் Electronics & Communication Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech அல்லது Optical Communication/ Communication System / Applied Electronics பாடப்பிரிவில் M.E / M.Tech பட்டயம் பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNPSC குரூப் 2, குரூப் 2A காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
NIT Trichy வயது விவரம்:
08.03.2022 ம் நாளின் படி, விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
NIT Trichy ஊதிய விவரம்:
Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். மேலும் கூடுதல் தொகை குறித்த தகவல்களை அறிவிப்பில் காணலாம்.
NIT Trichy தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக TIDEL Park வேலைவாய்ப்பு 2022- விண்ணப்பங்கள் வரவேற்பு!
NIT Trichy விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து பரிந்துரைக்கப்பட்ட வடிவில் தயார் செய்து கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் கீழே கொடுக்கப்பட்ட ஆன்லைன் அப்ளிகேஷன் லிங்க் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.