அனைத்து மாவட்டங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
உத்திரபிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளாக அனைத்து மாவட்டங்களிலும் தினசரி இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மட்டும் இரவுநேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
நாடு முழுவதும் தற்போது கொரோனா 2 ஆம் அலையில் இருந்து சற்றே மீண்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக 4 லட்சம் வரை பதிவு செய்யப்பட்டு வந்த கொரோனா பாதிப்பானது, தற்போது 1 லட்சத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் நோய் தடுப்பு கட்டுப்பாடுகளாக அறிவிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்தரபிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவை முற்றிலுமாக அரசு தளர்த்தியுள்ளது.
இந்தியா vs இலங்கை கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியீடு – ஜூலை 13 முதல் தொடக்கம்!!
இது குறித்து உத்திர பிரதேச கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அனைத்து மாவட்டங்களிலும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை நடைமுறையில் இருக்கும். இப்போது ஏறத்தாழ அனைத்து மாவட்டங்களிலும் 600க்கும் குறைவான கொரோனா நோயாளிகள் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 797 புதிய பாதிப்புகள் மட்டுமே பதிவாகியுள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.
TN Job “FB
Group” Join Now
இதற்கு முன்னதாக கடந்த வாரம் முதல் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள கடைகள் மற்றும் சந்தைகள் வாரத்தில் ஐந்து நாட்களும் திறக்க அனுமதிக்கப்பட்டன. தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஒவ்வொரு தளர்வுகளை அறிவித்து வந்த அரசு, பகல் நேரங்களில் இருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கியுள்ளது. இதை தொடர்ந்து அம்மாநிலத்தில் அனைத்து சேவைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு, இரவுநேர ஊரடங்கு மட்டும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.