இந்தியா vs இலங்கை கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியீடு – ஜூலை 13 முதல் தொடக்கம்!!

0
இந்தியா vs இலங்கை கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியீடு - ஜூலை 13 முதல் தொடக்கம்!!
இந்தியா vs இலங்கை கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியீடு - ஜூலை 13 முதல் தொடக்கம்!!
இந்தியா vs இலங்கை கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியீடு – ஜூலை 13 முதல் தொடக்கம்!!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கான முதல் ஒரு நாள் போட்டி வருகிற ஜூலை 13ம் தேதி முதல் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் அட்டவணை வெளியாகி உள்ளது.

இந்தியா vs இலங்கை:

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கம் பரவி வருவதனால் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனாலே ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இலங்கை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்குபெறும் வீரர்கள் யாரும் இடம்பெற மாட்டார்கள். இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் இந்திய அணியில் அனைத்து முன்னணி வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு – மத்திய அரசு அறிவிப்பு!!

எனவே இலங்கை தொடருக்கு அதிக இளம் வீரர்கள் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இலங்கை தொடரில் இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் இந்திய அணி கேப்டன் ராகுல் டிராவிட் தேர்வு செய்ப்பட்டுள்ளார். அதேபோல் இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணியை அனுபவம் வாய்ந்த ஷிகர் தவான் கேப்டனாக வழி நடத்தவுள்ளார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒரு நாள் மற்றும் 3 டி 20 போட்டிகளை விளையாடவுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தற்போது இந்த போட்டிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி முதலில் ஒரு நாள் தொடர் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்குமான முதல் ஒரு நாள் போட்டி வருகிற ஜூலை 13ம் தேதியும், இரண்டாம் ஒரு நாள் போட்டி ஜூலை 16 மற்றும் மூன்றாம் ஒரு நாள் போட்டி ஜூலை 18ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து முதல் டி 20 போட்டி ஜூலை 21, இரண்டாம் டி 20 போட்டி ஜூலை 23 மற்றும் மூன்றாம் டி 20 போட்டி ஜூலை 25 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!