தமிழகத்தில் இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு – ஜன.6 முதல் அமல்! அரசு அறிவிப்பு!

0
தமிழகத்தில் இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு - ஜன.6 முதல் அமல்! அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு - ஜன.6 முதல் அமல்! அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் இரவு 10 மணிமுதல் காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு – ஜன.6 முதல் அமல்! அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் அதிகரித்து வரும் ஓமிக்ரான் தொற்று காரணமாக நாளை (ஜன.6) முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்த இருப்பதாக அரசு உத்தரவிட்டுள்ளது.

இரவு ஊரடங்கு அமல்:

மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த நிலையில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த நவம்பர் மாதம் முதல் ஓமிக்ரான் வைரஸ் தாக்கம் அதிகமாக பரவ தொடங்கியதால் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் ஏற்கனவே அமலில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வருகிற 9 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலை விட்டு விலகும் முல்லை – காவ்யா அறிவுமணி ஓபன் டாக்!

தற்போது கூடுதல் அறிவிப்பாக இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், இரவு நேரங்களில் பொது போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • மேலும் அத்தியாசவசிய தேவைகளான பால் விநியோகம் மற்றும் மருத்துவ அவசரம் ஆகியவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • தனியார் தொழில்நுட்ப ஊழியர்கள் தங்களது அடையாள அட்டையை காட்டி பயணம் செய்யலாம் எனவும் பெரும்பான்மையான ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  • உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • வழிபாட்டு தளங்களில் ஞாயிறு, சனி, வெள்ளி கிழமைகளில் பொது மக்கள் வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு, பொருட்காட்சி, புத்தக கண்காட்சி ஆகியவை ஊரடங்கின் போது செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • பெட்ரோல் பங்குகள், ஏடிஎம் மையங்கள், மருந்தகங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!