NFDC இந்திய தேசியத் திரைப்பட மேம்பாட்டு கழகத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் (NFDC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Consultant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | NFDC |
பணியின் பெயர் | Consultant |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 02.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NFDC காலிப்பணியிடங்கள்:
NFDC நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Consultant பணிக்கென இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
NFDC வயது வரம்பு:
Consultant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 35 ஆக இருக்க இருக்க வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
NFDC கல்வி தகுதி:
Consultant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.COM (Hons/Eco Hons) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ECIL ஆணையத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
Exams Daily Mobile App Download
Consultant அனுபவ விவரம் :
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 04 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
NFDC ஊதிய விவரம்:
Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.80,000/-வரை ஊதியமாக வழங்கப்படும்.
Consultant தேர்வு செய்யப்படும் முறை :
NFDC இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NFDC விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் (02.01.2023) அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.