WhatsApp செயலியின் புதிய View Once அம்சம் – இந்த வாரம் அறிமுகம்!

0
WhatsApp செயலியின் புதிய View Once அம்சம் - இந்த வாரம் அறிமுகம்!
WhatsApp செயலியின் புதிய View Once அம்சம் - இந்த வாரம் அறிமுகம்!
WhatsApp செயலியின் புதிய View Once அம்சம் – இந்த வாரம் அறிமுகம்!

WhatsApp செயலியின் View Once அம்சம் பயனர் அனுப்பும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை திறந்த பிறகு மறைந்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பயனர்களின் தனியுரிமை மீது அதிக கட்டுப்பாட்டை அளிப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

புதிய அம்சம்

பல மாதங்களாக வெளி வந்து கொண்டிருக்கும் View Once அம்சம் குறித்த தகவலை, தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த அம்சம் பெயருக்கு ஏற்றாற்போல செய்தி பக்கத்தை திறந்த பிறகு ஒரு படம் அல்லது காணொளியை நீக்குகிறது. இந்த View Once அம்சம் மூலம் பயனர்களின் தனியுரிமை மீது அதிக கட்டுப்பாட்டை கொடுக்க விரும்புவதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் முன்னதாக நடைபெற்ற பீட்டா சோதனைகளின் போது வாட்ஸ் அப் செயலியில் பல முறை தோன்றியது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – மருத்துவ ஆய்வு கழகம்!

இந்த அம்சமானது உடனடி தேவைகளுக்காக மட்டும் பயன்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் பெறப்படும் தரவுகள் மொபைல் போனில் சேமிக்கப்படாது. உதாரணமாக, உங்கள் வீட்டு வைஃபை அல்லது அலுவலக வைஃபை யின் கடவுச்சொல்லை நீங்கள் மறந்து விட்டால், அதை எழுதும்படி யாரையாவது கேட்கலாம் அல்லது View Once media சேவைகளின் மூலமாகவும் கடவுச்சொல்லை அனுப்பலாம். பொதுவாக கடவுச்சொல் அல்லது ATM பின் எண் போன்றவற்றை உங்கள் தொலைபேசியின் கேலரியில் சேமித்து வைக்க கூடாது.

ஏனெனில் உங்கள் கேலரியை பயன்படுத்துபவர்கள் அதை தவறாக உபயோகிக்க கூடும். அதற்கு பதிலாக தான் இந்த வியூ ஒன்ஸ் அம்சத்துடன், உங்களுக்குத் தேவையானதை நீங்கள் பெற்ற பின்பாக அவை அழிக்கப்பட்டு விடும். அனைத்து View Once மீடியாவும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனால் பாதுகாக்கப்படுகிறது என வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால் ஒருவரது தனிப்பட்ட செய்திகளை வாட்ஸ் அப்பால் கூட பார்க்க முடியாது. அத்தகைய தகவல்கள் புதிய one-time ஐகானுடன் தெளிவாகக் குறிக்கப்படும். நீங்கள் செயலியை திறந்தவுடன், செய்தி திறந்தது என்று தோன்றும்.

TN Job “FB  Group” Join Now

இதனால் செய்திகளை பெறுநருக்கும் அனுப்புநருக்கும் இடையில் நடைபெறும் சேட்டில் என்ன நடக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இந்த அம்சம் உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்கு இந்த வாரம் முதல் அறிமுகப்படுத்தப்படும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. செய்திகள் அனுப்பப்பட்ட 14 நாட்கள் வரை அவை பாதுகாக்கப்படும். ஒவ்வொரு முறையும் செய்திகளை அனுப்பும் போதும் View once Media வை செலக்ட் செய்ய வேண்டும். இருப்பினும், வாட்ஸ் அப் செயலியின் ஸ்க்ரீன் ஷாட் அம்சம் வியூ ஒன்ஸுடன் அறிவிக்கப்படவில்லை. எனவே உங்கள் One-time Media மறைவதற்கு முன்பே செய்திகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது முக்கியமானதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!