மூர்த்தி வீட்டை வாங்க நினைக்கும் மல்லி, மீனா அப்பாவின் புதிய திட்டம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
மூர்த்தி வீட்டை வாங்க நினைக்கும் மல்லி, மீனா அப்பாவின் புதிய திட்டம் - இன்றைய
மூர்த்தி வீட்டை வாங்க நினைக்கும் மல்லி, மீனா அப்பாவின் புதிய திட்டம் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
மூர்த்தி வீட்டை வாங்க நினைக்கும் மல்லி, மீனா அப்பாவின் புதிய திட்டம் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை அம்மா, வீட்டை ஜீவா பெயருக்கு எப்படி எழுதி கொடுக்கலாம் என கேட்டு சண்டை போடுகிறார். பின் தனம் அவங்க நல்ல விலைக்கு கேட்டதாக சொல்ல மல்லி, வீட்டை கொடுப்பது தெரிந்தால் நான் நல்ல விலைக்கு வாங்கி இருப்பேன் என சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை அம்மா மூர்த்தி வீட்டை விற்பதை கேள்விப்பட்டு தனத்திடம் வந்து சத்தம் போடுகிறார். உடனே தனம் மீனாவின் அப்பா நல்ல விலைக்கு கேட்டார் அதனால் தான் கொடுத்ததாக சொல்கிறார். பின் முல்லை அம்மா கதிரை வீட்டை விட்டு அனுப்பிவிட்டு எல்லாரும் சேர்ந்து வீட்டை மொத்தமாக எடுத்துக் கொள்ள நினைக்கிறீர்களா என கேட்க, உடனே தனம் நாங்க அப்படி எல்லாம் நினைக்கவில்லை, கதிருக்கும் சேர்த்து தான் வீடு கட்டுவதாக சொல்கிறார். ஆனால் பார்வதி அதை நம்பாமல் இருக்க, உடனே ஐஸ்வர்யா நாங்க ஒன்றும் அவங்களை வீட்டை விட்டு போக சொல்லவில்லை என கேட்கிறார்.

நீயெல்லாம் எனக்கு புரிய வைக்க வேண்டாம் என பார்வதி சொல்கிறார். என் மகளை வெளியே அனுப்பிவிட்டு நீங்க ஜீவா பெயரில் எப்படி எழுதி வைக்கலாம் என பார்வதி கேட்க உடனே மீனா என் அப்பா சொல்லிய விலையில் தான் வாங்கி இருக்காங்க குறைத்து ஒன்றும் வாங்கவில்லையே என சொல்கிறார். மல்லி நீங்க வீட்டை விற்பதாக சொன்னால் நான் கூடுதல் பணம் கொடுத்து வாங்கி இருப்பேன் என சொல்ல. உடனே தனம் மீனாவின் அப்பாவிற்கு கொடுப்பதாக வாக்கு கொடுத்துவிட்டேன் என சொல்கிறார். பின் முல்லை அம்மா எப்படி வீட்டை கொடுக்க போறீங்க என நான் பார்க்கிறேன் என சொல்கிறார்.

இனியாவை ராதிகா வீட்டிற்கு அழைத்து சென்ற கோபி, சமையல் வேலைகளை கவனிக்கும் பாக்கியா – இன்றைய எபிசோட்!

பின் கண்ணன் வீட்டில் எல்லாருக்கும் நடனம் ஆடி காட்டி சிரிக்க வைக்கிறார். ஆனால் மூர்த்தி மட்டும் சோகமாக இருக்க தனம் என்ன ஆச்சு என கேட்கிறார். பின் மூர்த்தி இந்த வீட்டில் இருந்து தான் எல்லாம் தொடங்கியது. ஆனால் இப்போது வீட்டை கொடுக்க இருப்பது கஷ்டமாக இருப்பதாக சொல்கிறார். அத்தை தான கனவில் வந்து சொன்னார்கள் அதனால் எல்லாம் நல்லதுக்கு தான் என தனம் சொல்கிறார்.

Exams Daily Mobile App Download

மறுநாள் எல்லாரும் பத்திரம் அலுவலகத்திற்கு கிளம்புகின்றனர். அப்போது மூர்த்தி அம்மா அப்பா புகைப்படத்தை பார்த்து நல்லபடியாக முடிய வேண்டும் என சாமி கும்பிடுகிறார். பின் எல்லாரும் கிளம்ப கதிர் வந்துவிடுவானா என மூர்த்தி கேட்கிறார். வந்துவிடுவான் என சொல்ல, கதிர் வீட்டை விட்டு போனதை நினைத்து மூர்த்தி வருத்தப்படுகிறார். எல்லாரும் காரில் ஏறிவிட மூர்த்தி வருத்தத்துடன் வீட்டை பார்க்கிறார்.

பின் மீனாவின் அப்பா கிளம்ப மீனாவின் அம்மாவை சீக்கிரம் வர சொல்கிறார். பின் மீனாவின் அப்பா பதிவு முடிந்த பின் இங்கே தான் வருவேன் என சொல்கிறார். இந்த இடத்தை வாங்க வேண்டுமா என மீனாவின் அம்மா கேட்க, எப்படி இருந்தாலும் மீனாவிற்கு தான இடம் போக போகிறது என மீனாவின் அப்பா சொல்கிறார். பின் மீனாவின் அப்பா இன்னும் சில வருடங்களில் அந்த இடம் நிறைய விலைக்கு போகும் என சொல்கிறார். பதிவு முடிந்த பின் என் விளையாட்டை பார் என சொல்கிறார். பின் கதிர் முல்லையை கடையை பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு பத்திர அலுவலகம் வரை செல்கிறார். அப்போது பார்வதி தடுத்து நிறுத்தி உங்க அண்ணா கூப்பிட்டதும் போறீங்க உங்களிடம் இது பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை என சொல்கிறார். இப்போது ஜீவா பெயரில் இடத்தை எழுதி வைப்பது என்ன அர்த்தம் என கேட்கிறார்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!