இனியாவை ராதிகா வீட்டிற்கு அழைத்து சென்ற கோபி, சமையல் வேலைகளை கவனிக்கும் பாக்கியா – இன்றைய எபிசோட்!

0
இனியாவை ராதிகா வீட்டிற்கு அழைத்து சென்ற கோபி, சமையல் வேலைகளை கவனிக்கும் பாக்கியா - இன்றைய எபிசோட்!
இனியாவை ராதிகா வீட்டிற்கு அழைத்து சென்ற கோபி, சமையல் வேலைகளை கவனிக்கும் பாக்கியா - இன்றைய எபிசோட்!
இனியாவை ராதிகா வீட்டிற்கு அழைத்து சென்ற கோபி, சமையல் வேலைகளை கவனிக்கும் பாக்கியா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா கோபியுடன் வெளியே செல்ல பாக்கியாவிடம் போன் செய்து வர நேராகும் என சொல்கிறார். பின் கோபி ராதிகா வீட்டிற்கு இனியாவை அழைத்து செல்ல ஆனால் இனியாவிற்கு அது பிடிக்கவில்லை. மறுபக்கம் பாக்கியா பெண்களை அழைத்து எப்படி சமைக்க வேண்டும் என சொல்கிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், இனியா கோபியுடம் வெளியே செல்கிறார். அப்போது இனியா எனக்கு ஒரு ஆசை தான் நீங்களே என்னை தினமும் ஸ்கூலிற்கு கூட்டிக் கொண்டு செல்லுங்கள் என சொல்கிறார். உடனே கோபி சரி என சொல்கிறார். இன்னும் கொஞ்ச நாள் தான் அப்பறம் உன்னை என்னுடன் அழைத்து செல்கிறேன் என கோபி சொல்கிறார். பின் இனியா இப்போது என்னை எங்கையாவது கூட்டி செல்லுங்கள் என சொல்ல இப்பவேவா என கோபி கேட்க ஆமாம் என இனியா சொல்கிறார். உடனே கோபி வீட்டிற்கு போன் செய்து நீ வர நேரமாகும் என சொல் என கோபி சொல்ல உடனே இனியா பாக்கியாவிற்கு போன் செய்து டாடி உடன் இருக்கேன் வர நேரமாகும் என சொல்கிறார்.

பின் பாக்கியாவிடம் ஜெனி இனியாவா பேசியது என கேட்க ஆமாம், எனக்கும் அவருக்கும் தான் பிரச்சனை அதனால் இந்த வீட்டில் இருப்பவர்கள் யாரும் அவருடன் பேச கூடாது என நான் நினைத்தது இல்லை என சொல்ல, உடனே செல்வி அவங்க உன்னை புரிந்து கொண்டு வருவார்கள் என செல்வி சொல்கிறார். மறுபக்கம் எழில் அலுவலகத்தை காலி செய்ய செல்ல சதீஸ் கடுப்பில் பேசுகிறார். அமிர்தா என்ன இவர் இப்படி பேசுவதாக கேட்க அவனுக்கு படம் டிராப் ஆனதால் கோவம் என சொல்கிறார். பின் அமிர்தா நீங்க எப்படி மனதில் இவ்வளவு கஷ்டத்தை வைத்து கொண்டு எல்லாருக்கும் ஆறுதல் சொல்கிறீர்கள் என கேட்கிறார். பின் எழில் படம் போனது எனக்கு பிரச்சனை இல்லை ஆனால் வீட்டு நிலைமை சரி இல்லை என சொல்ல அமிர்தா கையை பிடித்துக் கொண்டு ஆறுதல் சொல்கிறார்.

பின் எழில் அம்மா அப்பா பற்றி கேட்க, முன்னாடி மாதிரி என்னிடம் பேசவில்லை என கேட்கிறார். அமிர்தா அப்படி இல்லை என சொல்ல ஆனால் எழில் எனக்கு என் வீட்டில் நடந்ததால் எதோ தவறாக இருப்பதாக சொல்கிறார். அமிர்தா அதெல்லாம் ஒன்றுமில்லை என சொல்ல, அப்போது ப்ரொடியூசர் மகள் வந்து பார்த்துவிட்டு கோபப்படுகிறார். வர்ஷினி சதீஷிடம் இருவரும் யாரு என கேட்க, அவங்க காதலர்கள் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக சதீஸ் சொல்கிறார். உடனே ப்ரொடியூசர் மகள் அதிர்ச்சி அடைகிறார்.

மறுபக்கம் கோபி இனியாவை அழைத்து கொண்டு ராதிகா வீட்டிற்கு செல்கிறார். அங்கே மயூரா இருக்க இனியாவை பார்த்ததும் அக்கா எவ்வளவு நாள் ஆச்சு உங்களை பார்த்து என பாசமாக பேசுகிறாள். உடனே இனியா இப்போ எதற்கு இங்கே கூட்டிக் கொண்டு வந்தீங்க என கேட்க மயூரா இனியாவை உள்ளே அழைத்து செல்கிறார். ராதிகா இனியாவை பார்த்து சந்தோசப்பட ஆனால் இனியாவிற்கு அங்கே இருப்பது பிடிக்காமல் இருக்கிறது. மயூரா ஐஸ் கிரீம் கொடுக்க ஆனால் இனியா வேண்டாம் என சொல்கிறார். அப்போது ராதிகாவின் அண்ணன் வந்து யார் இது என கேட்க, இனியா என சொல்கிறார். பின் ராதிகாவின் அம்மா இவள் எதற்கு இங்கே வந்திருக்கிறாள் என கோபப்படுகிறார்.

ரயில் பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் – இதை மீறினால் ஆபத்து தான்!

இனியா போகலாம் என சொல்ல ஆனால் ராதிகா இருந்துவிட்டு போகலாம் என சொல்கிறார். மயூராவும் இருக்க சொல்ல, ராதிகாவின் அம்மா கோபப்படுகிறார். கோபி இருந்துவிட்டு போகலாம் என சொல்ல, ஆனால் இனியாவிற்கு பிடிக்கவில்லை. அம்மா தேடுவார்கள் என சொல்லிவிட்டு இனியா கிளம்புகிறார். மறுபக்கம் செழியன் ஜெனியிடம் பேச வேண்டும் என சொல்ல ஆனால் ஜெனி எனக்கு வேலை இருப்பதாக கிளம்புகிறார். பின் ஜெனி சமையல் செய்ய இருப்பவர்கள் வந்துட்டாங்களா என கேட்க ஆமாம் என செல்வி சொல்கிறார். பாக்கியா நாம முதலில் மண்டபத்தில் சமைக்க போகிறோம் அதனால் ஒழுங்காக செய்ய வேண்டும் என சொல்கிறார். 2 நாட்கள் வேலை இருக்கும் வீட்டு பக்கம் வர முடியாது. அப்பறம் அங்கே வந்துட்டு அப்படி சொல்ல கூடாது என சொல்ல அனைவரும் சரி என சொல்கின்றனர்.

பின் எழில் சதீஸ் அலுவலகத்தை காலி செய்ய சதீஸ் சினிமா போல மோசமான தொழில் இல்லை என சொல்லி புலம்பி கொண்டிருக்கிறார். அப்போது எழில் பேசாமல் இரு என சொல்ல பின் எழில் சென்று ப்ரொடியூசரிடம் பேச செல்கிறார். அவரிடம் கிளம்புவதாக சொல்ல எனக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. எனக்கு வெற்றியை தேடி கொடுத்தது நீங்க தான் அதனால் நான் நன்றிக்கடன் பட்டு இருக்கேன் என சொல்கிறார். இரண்டாவது படம் உங்களுடன் செய்ய முடியவில்லை என்னை மன்னித்துவிடுங்கள் என எழில் சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!