புதிய மத்திய அமைச்சர்கள் பட்டியல்
நாட்டின் பிரதமராக திரு நரேந்திர மோடி, இன்று (30.05.2019) பதவியேற்றார். அவர், இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Current Affairs 2019
Video in Tamil
புதுதில்லி குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த விழாவில், திரு நரேந்திர மோடிக்கு பிரதமராக, குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
பிரதமரைத் தொடர்ந்து, 24 கேபினெட் அமைச்சர்கள் பதவியேற்றனர். பின்னர், 33 இணையமைச்சர்கள் பதவியேற்றனர்.
மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கேபினெட் அமைச்சர்கள்:
1. திரு. ராஜ்நாத் சிங்
2. திரு. அமித் ஷா
3. திரு. நிதின் கட்கரி
4. திரு. டி வி சதானந்த கவுடா
5. திருமதி நிர்மலா சீதாராமன்
6. திரு. ராம்விலாஸ் பாஸ்வான்
7. திரு. நரேந்திர சிங் தோமர்
8. திரு. ரவிசங்கர் பிரசாத்
9. திருமதி. ஹர்சிம்ரத் கவுர் பாதல்
10. திரு. தாவர்சந்த் கெலாட்
11. திரு. சுப்பிரமணியம் ஜெயசங்கர்
12. திரு. ரமேஷ் போக்ரியால் நிஷங்க்
13. திரு. அர்ஜூன் முண்டா
14. திருமதி ஸ்மிருதி இரானி
15. டாக்டர் ஹர்ஷ் வர்தன்
16. திரு. பிரகாஷ் ஜவ்டேகர்
17. திரு. பியூஷ் கோயல்
18. திரு. தர்மேந்திர பிரதான்
19. திரு. முக்தார் அப்பாஸ் நக்வி
20. திரு. பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி
21. டாக்டர் மகேந்திரநாத் பாண்டே
22. டாக்டர் அர்விந்த கன்பத் சாவந்த்
23. திரு. கிரிராஜ் சிங்
24. திரு. கஜேந்திர சிங் ஷெகாவத்
இணையமைச்சர்கள்:
1 திரு. சந்தோஷ் குமார் கங்வார்
2 திரு. இந்தர்ஜித் சிங்
3 திரு. ஸ்ரீபத் யசோ நாயக்
4 டாக்டர் ஜிதேந்திர சிங்
5 திரு. கிரண் ரிஜிஜூ
6 திரு. பிரகலாத் சிங் படேல்
7 திரு. ராஜ்குமார் சிங்
8 திரு. ஹர்தீப் சிங் பூரி
9 திரு. மன்சுக் மாண்டவியா
10 திரு. ஃபகன் சிங் குலஸ்தே
11 திரு. அஸ்வினி குமார் சௌபே
12 திரு. அர்ஜூன் ராம் மேக்வால்
13 ஜெனரல் வி கே சிங்
14 திரு. கிஷன் பால் புஜல்
15 திரு. தான்வே ராவ்சாஹேப் தாதாராவ்
16 திரு. ஜி. கிஷன் ரெட்டி
17 திரு. பர்ஷோத்தம் ரூபாலா
18 திரு. ராம்தாஸ் அத்வாலே
19 சாத்வி நிரஞ்சன் ஜோதி
20 திரு. பாபுல் சுக்ரியோ
21 டாக்டர் சஞ்ஜீவ் குமார் பால்யான்
22 திரு. தோத்ரே சஞ்சய் சாம்ராவ்
23 திரு அனுராக் சிங் தாகூர்
24 திரு சுரேஷ் அங்கடி
25 திரு நித்யானந்த் ராய்
26 திரு. ரத்தன் லால் கடாரியா
27 திரு. வி. முரளிதரன்
28 திருமதி ரேணுகா சிங் செரூதா
29 திரு. சோம் பிரகாஷ்
30 திரு. ராமேஷ்வர் தேலி
31 திரு. பிரதாப் சந்திர சாரங்கி
32 திரு. கைலாஷ் சௌத்ரி
33 திருமதி தேபஸ்ரீ சௌத்ரி
பிஜேபி தேசியத் தலைவர் திரு அமித் ஷா முதல் முறையாக மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.
இந்த விழாவில் கிர்கிஸ்தான் அதிபரும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவருமான திரு சோரோன்பே ஜீன்பெக்கோவ் மொரீஷியஸ் அதிபர் திரு. பிரவீந்த் ஜெகன்னாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பிம்ஸ்டெக் எனப்படும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா விளிம்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இலங்கை அதிபர் திரு மைத்ரி பால சிறிசேனா, பங்களாதேஷ் அதிபர் அப்துல் ஹமீத், மியான்மர் அதிபர் ஊ வின் மின்ட். நேபாள பிரதமர் கே பி ஷர்மா ஒலி, பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங், ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தாய்லாந்து அரசு சார்பில் சிறப்பு தூதர் கிரிசாத பூன்ராஜ் பங்கேற்றார்.
குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு, மக்களவைத் தலைவர் திருமதி சுமித்ரா மகாஜன், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் திருமதி சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் திரு ராகுல்காந்தி ஆகியோரும், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள், வெளிநாட்டு தூதர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.
PDF Download
இலாக்கா வாரியான புதிய மத்திய அமைச்சர்கள் விவரம் PDF Download
பொது அறிவு பாடக்குறிப்புகள்
நடப்பு நிகழ்வுகள் 2019
To Follow Channel – Click Here
Join WhatsAPP Group – Click Here
Telegram Click Here