TNPSC ரூ.2,05,700 சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TNPSC ரூ.2,05,700 சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC ரூ.2,05,700 சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TNPSC ரூ.2,05,700 சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

TNPSC, ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பொறியாளர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு :

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ள பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அரசு பணிக்கு என 626 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே 03.05.2022 வரை ஆன்லைன் முறையில் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த அறிவிப்பு படி மொத்த காலியிடங்கள் 626 ஆகும். மேலும் தானியங்கிப் பொறியாளர் (மோட்டார் வாகன பராமரிப்புத் துறை) பணியில் 04 காலிபணியிடங்கள் உள்ளன. தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாத சம்பளம் ரூ.56,100 – 2,05,700 வழங்கப்படும்.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் புதிய செயலி!

இதை அடுத்து இளநிலை மின் ஆய்வாளர் பணியில் 08 காலிப் பணியிடங்கள் உள்ளன. உதவி பொறியாளர் (வேளாண்மை பொறியியல்) பணியில் 66 காலிபணியிடங்கள் உள்ளன. உதவி பொறியாளர் (நெடுஞ்சாலைத் துறை) பணியில் 33 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும் உதவி இயக்குநர்(தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை) பணியில் 18 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதைஅடுத்து உதவி பொறியாளர்(நீர்வளத் துறை) பணியில் 01 காலிப்பணியிடங்கள் உள்ளன. உதவிபொறியாளர் (பொதுப்பணித் துறை) பணியில் 1+ 307 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த வகையில் முதலாள் – 07 , தொழில்நுட்ப உதவியாளர் – 11, உதவி பொறியாளர்(ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை) – 93 காலிப்பணியிடங்கள் உள்ளன.

இந்த பணிக்கு மாத சம்பளம் ரூ. 37,700 – 1,38,500 வழங்கப்படும்.உதவி பொறியாளர்(தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) பணியில் 64 காலிபணியிடங்கள் உள்ளன. உதவி பொறியாளர் (சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம்) பணியில் 13 காலிப்பணியிடங்கள் உள்ளன. மாத சம்பளம் ரூ.37,700 – 1,38,500 ஆகும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பொறியியல் துறையில் ஆட்டோமொபைல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், விவசாயம், சிவில், தொழிலகம், உற்பத்தி போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பத்தார் வயது 01.07.2022 தேதியின்படி கணக்கிடப்படும். 32 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி,எம்பிசி, பிசி, அனைத்து வகுப்பினைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. மேலும் பதிவுக் கட்டணம் ரூ.100, தேர்வுக் கட்டணமாக ரூ.200. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த பணிகளுக்கு எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி 26.06.2022 ஆகும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!