அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் புதிய செயலி!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் - மத்திய அரசின் புதிய செயலி!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் - மத்திய அரசின் புதிய செயலி!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் புதிய செயலி!

மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மேரா ரேஷன் செயலி மூலம் பயனர்கள் பல விதமான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும். இந்த செயலி பற்றி பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

மேரா ரேஷன் செயலி

நாடு முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதார்களுக்கு உபயோகப்படும் விதமாக மத்திய அரசு ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தை கடந்த ஆண்டில் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்களது ரேஷன் பொருட்களை மானிய விலையில் தடையில்லாமல் பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ (ONORC) என்ற திட்டம் புதிய இடத்திற்கு இடம்பெயரும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தைத் தக்கவைக்க உதவுகிறது. இந்த முன்முயற்சி அரசுக்கு சொந்தமான ரேஷன் சேவைகளை கொடுப்பதோடு, ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்த உதவி செய்கிறது.

இந்த வாரத்தில் 4 நாட்களுக்கு வங்கி விடுமுறைகள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்தச் சேவையைப் பெறுவதற்கான ஆப்ஸ் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்டு போன்களில் கிடைக்கிறது. வழக்கமாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பிடிஎஸ் எனப்படும் பொது விநியோக முறை மூலம் உணவு தானியங்களைப் பெறுவது உண்டு. ஆனால் அவர்கள் வெவ்வேறு மாநிலங்களுக்கு செல்லும்போது, PDS நன்மைகளை பெறுவதில் பெரிய சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இப்போது மேரா ரேஷன் செயலி மூலம் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த திட்டத்தின் மூலம் பயனாளிகள் நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டு சேவைகளைப் பெறுவார்கள். இப்போது மத்திய அரசின் முயற்சியான மேரா ரேஷன் செயலியின் பயன்பாடு மற்றும் அம்சங்கள் பற்றிய விரிவான தகவல்களை பார்க்கலாம்.

பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதற்கான படிகள்:

  • Google Play Storeக்கு செல்லவும்
  • தேடல் பொத்தானை கிளிக் செய்து, மேரா ரேஷன் ஆப் என தட்டச்சு செய்யவும்
  • மத்திய Aepds குழு பதிவேற்றிய செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
பயன்பாடுகள்:
  • பதிவு: முதலில் பயனர்கள் சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்து ரேஷன் கார்டு எண்ணை வழங்குவதன் மூலம் செயலியில் பதிவு செய்து கொள்ளலாம்.
  • ரேஷன் கடைகள்: பயனர்கள், தங்கள் இருப்பிடத்தை தொலைபேசியில் இயக்குவதன் மூலம் அருகில் அமைந்துள்ள ரேஷன் கடைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • ONORC மாநிலங்கள்: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு வசதி உள்ள மாநிலங்களையும் பயனர்கள் சரிபார்க்கலாம்
  • பரிவர்த்தனைகள்: ரேஷன் கார்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம், பயனாளிகள் பரிவர்த்தனை விவரங்களையும் பெறலாம்
  • தகுதிக்கான அளவுகோல்கள்: ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணைப் பயன்படுத்தி கார்டுதாரரின் தகுதியை இது சரிபார்க்கிறது.

  • ஆதார் இணைப்பு: ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணை வழங்கும் அதே முறையில் ஆதார் இணைப்பும் இதில் சாத்தியமாகும்.
  • ஆலோசனை மற்றும் கருத்து: பயனாளிகள் தனது மொபைல் எண் மற்றும் கார்டு எண்ணைப் பகிர்வதன் மூலம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சேவைகளை மதிப்பிடலாம். அதற்கு கருத்து தெரிவிக்கலாம்
  • உள்நுழைவு: பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல் மூலம் நீங்கள் வசிக்கும் தற்போதைய மாநிலத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் உள்நுழைவு செய்யப்படுகிறது.
  • Fps கருத்து: நியாயமான விலை என அறியப்படும் உரிமம் பெற்ற கடைக்கு Fps பின்னூட்டம் மூலம் கருத்துக்களுடன் பின்னூட்டம் அளிக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!