தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வர மேலும் சிக்கல் – அரசின் அறிவிப்பால் அதிர்ச்சி!

0

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வர மேலும் சிக்கல் – அரசின் அறிவிப்பால் அதிர்ச்சி!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு கார்டு எப்போது வழங்கப்படும் என்பது குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

புதிய ரேஷன் கார்டு:

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு அரசு தரப்பில் இருந்து வழங்கப்படும் அனைத்து நிவாரணங்களும் ரேஷன் கார்டு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கார்டு மூலம் இலவசமாக உணவுப்பொருட்கள் அதாவது அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் மாதம் வழங்கப்பட்டு வருகிறது.புதிதாக திருமணம் செய்தவர்கள் மேலும் கார்டு தொலைந்து அதன் நகலுக்கு விண்ணப்பிப்பவர்கள் என நாளுக்கு நாள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வாங்கவும் மக்கள் இதற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

முதலில் ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 30 அல்லது 45 நாட்களுக்குள் கார்டு வந்துவிடும். ஆனால் தற்போது பல மாதங்கள் ஆகியும் ரேஷன் கார்டு வருவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அஅடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுவதை ஒட்டி புதியதாக ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளவரை புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாது. எனவே இன்னும் இந்த இன்னும் ரேஷன் கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு கார்டுகள் தாமதமாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!