தமிழக அரசு வழங்கும் புதிய வகை ரேஷன் கார்டு – கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு!

0
தமிழக அரசு வழங்கும் புதிய வகை ரேஷன் கார்டு - கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு!
தமிழக அரசு வழங்கும் புதிய வகை ரேஷன் கார்டு - கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு!
தமிழக அரசு வழங்கும் புதிய வகை ரேஷன் கார்டு – கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு!

தமிழகத்தில் கணவனால் நிரந்தரமாக கைவிடப்பட்டு தனித்து வாழும் பெண்களுக்கு விவாகரத்து சான்று உள்பட எவ்வித சான்றும் இல்லாமல் புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

புதிய ரேஷன் கார்டு:

தமிழகத்தில் ரேஷன் மூலம் ஏழை, எளிய மக்கள் குறைந்த விலையில் மளிகை பொருட்களை பெற்று வருகின்றனர். கடந்த மாதங்களில் ரேஷன் கடைகளில் கொரோனா பேரிடரை கருத்தில் கொண்டு அரசு இலவசமாக மளிகை பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகைகளை வழங்கியது. அதனை தொடர்ந்து ரேஷன் கடைகள் மூலம் மக்கள் பயன்பெறும் வகையில் பனைவெல்லம் மற்றும் பயிறு வகைகள் வழங்கப்படும் என்று உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது. திமுக அரசு பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நவ.1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – முன்னேற்பாடுகள் தீவிரம்! முக்கிய உத்தரவு!

இந்த அறிவிப்பு வந்த நாள் முதல் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பிப்பவரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த நிலையில் பெண்களுக்கு பயனளிக்க கூடிய புதிய திட்டமாக கணவரால் கைவிடப்பட்டு முற்றிலும் மண வாழ்வை துறந்து தனித்து வாழும் பெண்கள் ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்தால் அப்பெண்களுக்கு விவாகரத்து சான்றிதழ் உட்பட எவ்வித சான்றிதழ்களும் இன்றி புதிய ரேஷன் கார்டு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 17% DA உயர்வு, தீபாவளி போனஸ் – மாநில அரசு அறிவிப்பு!

கணவனை விட்டு தனியாக வசிக்கும் பெண்களின் குடும்ப அட்டை கணவரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பெண் மற்றும் அவரின் குழந்தைகள் தனியாக வசித்து வருவதை உறுதி செய்து எழுத்து மூலமான வாக்குமூலம் பெற்றுக்கொண்டு, அலுவலர் குடும்ப தலைவரின் அனுமதி இல்லாமல் கைவிடப்பட்ட பெண்ணின் பெயரினை அவரது குடும்ப அட்டையில் இருந்து நீக்கி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த பெண்ணுக்கு எவ்வித ஆவணங்களும் இல்லாமல் புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!