மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை நிர்ணயிக்க புதிய சம்பள கமிஷன்? அறிக்கைகள் சொல்வது இதுதான்!

0
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை நிர்ணயிக்க புதிய சம்பள கமிஷன்? அறிக்கைகள் சொல்வது இதுதான்!
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை நிர்ணயிக்க புதிய சம்பள கமிஷன்? அறிக்கைகள் சொல்வது இதுதான்!
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை நிர்ணயிக்க புதிய சம்பள கமிஷன்? அறிக்கைகள் சொல்வது இதுதான்!

மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்வதற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 7வது சம்பள கமிஷனுக்கு பிறகு புதிய கமிஷன் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக புதிய ஃபார்முலாவை மத்திய அரசு கொண்டு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

புதிய சம்பள கமிஷன்

ஒவ்வொரு அரசுத்துறையில் உள்ள பல்வேறு பதவிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம், அகவிலைப்படி ஆகியவை சம்பள கமிஷன் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் குறித்த 7வது மத்திய ஊதியக் குழுவின் (CPC) பரிந்துரைகளை அமல்படுத்தியதன் மூலம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்கள் கடந்த சில ஆண்டுகளாக பலன் அடைந்து வருகின்றனர். கடந்த காலத்தில், கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த 5வது CPCன் போது 19 மாதங்களும், 6வது CPC அமலாக்கத்தின் போது 32 மாதங்களும் ஊழியர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

Exams Daily Mobile App Download

இருப்பினும், 2016ல் பல மாற்றங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு, 7வது CPC பரிந்துரைகள் உரிய தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் செயல்படுத்தப்பட்டன. இருப்பினும், 7வது ஊதியக் குழுவிற்குப் பிறகு புதிய ஊதியக் குழு எதுவும் இருக்காது என்றும் ஊழியர்களின் ஊதியத்தை நிர்ணயம் செய்வதில் புதிய ஃபார்முலாவை மத்திய அரசு கொண்டு வரலாம் என்றும் சமீபத்திய ஊடக அறிக்கைகள் கூறுகிறது. இந்த புதிய சம்பள உயர்வு செயல்திறன் இணைக்கப்பட்ட அதிகரிப்பின் அடிப்படையில் இருக்கும் என்று நிதி அமைச்சகத்தின் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், சம்பளக் கணக்கீட்டில் மதிப்பீடு தொடர்பான முறைகள் இன்னும் தெளிவாக இல்லை.

ரூ.50,000/- ஊதியத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

இப்போது அகவிலைப்படி 50% தாண்டியவுடன் சம்பளக் கூறுகளைத் தானாக கணக்கிடும் சூத்திரத்தில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாக ஊடக அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த புதிய கணக்கீடு, அநேகமாக தானியங்கி ஊதிய திருத்தம் என அழைக்கப்படலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 2014ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 7வது ஊதியக் குழு உருவாக்கப்பட்டது. நீதிபதி அசோக் குமார் மாத்தூர் தலைமையிலான ஊதியக் குழுவில், விவேக் ரே முழு நேர உறுப்பினராகவும், ரத்தின் ராய் பகுதி நேர உறுப்பினராகவும், மீனா அகர்வால் செயலாளராகவும் இருந்தார்கள். இந்த ஊதியக் குழு அறிக்கை சமர்ப்பிக்க 18 மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here