புதிதாக ஜோடி சேர இருக்கும் சின்னத்திரை நடிகர் & நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!

0

புதிதாக ஜோடி சேர இருக்கும் சின்னத்திரை நடிகர் & நடிகை – ரசிகர்கள் வாழ்த்து!

விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியலில் நடித்து காதலித்து நிஜ வாழ்க்கையில் கரம் பற்றிய ஆலியா, சஞ்சீவ் ஜோடிகளுக்கு அடுத்து மீண்டும் சீரியல் பிரபலங்கள் காதலித்து, விரைவில் திருமணம் என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீரியல் பிரபலங்களின் காதல்:

சின்னத்திரை சீரியலுக்கு பஞ்சமில்லாத வகையில் புது புது நாடக தொடர்கள் வந்து கொண்டேதான் உள்ளது. கதைக்களத்தை பொறுத்து ரசிகர்களும், பார்வையாளர்களும் அதிகரித்து வருவார்கள். மேலும்,தற்போது வரக்கூடிய எல்லா சீரியல்களுக்கும் ரசிகர்கள் குவிவது தாண்டி அதில் நடிக்கும் கதாபத்திரங்கள் மக்கள் மனதில் நீங்கலா இடத்தை பிடித்து விடுகிறது. இன்னும் சொல்லனும்னா சீரியலில் ஜோடியாக நடிக்கும் நடிகர்,நடிகைகள் நிஜ வாழ்க்கையிலும் ஒருவொருக்கொருவர் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள்.

அமீர் மற்றும் பாவ்னி ஜோடியை சேர்த்து வைக்க தான் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2? வைரலாகும் வீடியோ!

இதனால் ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் யார் யாரை காதலிக்கிறார்கள், யார் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியாக நடித்து வரும் அருண் பிரசாத் அவர்கள் பிரபல சீரியல் ராஜா ராணி 2 வில் வில்லியாக வரும் அர்ச்சனாவை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் போன்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் காட்டு தீயாக பரவி வருகிறது.

மேலும் அருணுக்கு படவாய்ப்புகள் கிடைத்துள்ளதாலும், அவர் காதலி சொல்லித்தான் அருண்பிரசாத் பாரதிகண்ணம்மா சீரியலில் இருந்து விலகப் போவதாகவும், அவருக்கு பதில் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சய் நடிக்க உள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த சீரியலின் கதாநாயகி மாற்றப்பட்ட நிலையில் தற்போது கதாநாயகனும் மாறப்போவதால் நிச்சயம் சீரியல் டல் என்பதில் சந்தேகமில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!