அமீர் மற்றும் பாவ்னி ஜோடியை சேர்த்து வைக்க தான் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2? வைரலாகும் வீடியோ!

0

அமீர் மற்றும் பாவ்னி ஜோடியை சேர்த்து வைக்க தான் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2? வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி, பிக்பாஸ் ஜோடி சீசன் ஒன்றில் சில பிக்பாஸ் போட்டியாளர்கள் கலந்து கொண்டு இறுதியில் அனிதா மற்றும் ஷாரிக் இருவரும் பரிசை தட்டிச் சென்றனர். இந்நிலையில் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் இரண்டாவது சீசன் இன்று தொடங்க உள்ளது. இதில் ரம்யா கிருஷ்ணன் நடுவராக வந்த நிலையில், ராஜு மற்றும் பிரியங்கா இருவரும் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க உள்ளனர். மேலும் பிக்பாஸ் காதலர்களான அமீர் மற்றும் பாவ்னி ஜோடியாக சேர்ந்து கலக்க உள்ளனர்.

வைரலாகும் வீடியோ:

விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சி புதிதாக தொடங்கினாலும் அந்த நிகழ்ச்சி வைரலாக கூடிய நிகழ்ச்சியாக மாறிவிடும். அந்த வகையில் பிபி ஜோடி என்கிற பெயரில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சிக்கு, ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் போட்டியாளர்களை ஜோடிகளாக மாற்றி, நடன நிகழ்ச்சியாக தொடங்கப்பட்டது. கடந்த பிக் பாஸ் சீசன் 5 முடிந்த பிறகு தற்போது பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி வரவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியது. இதை உறுதி செய்யும் விதமாக தற்போது பிபி ஜோடிகள் சீசன் 2 புரோமோவும் ரிலீசாகி உள்ளது. இதை பலரும் பார்த்து ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

JIO நிறுவனம் அறிவித்துள்ள புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் – முழு விவரம் இதோ! பயனர்கள் கவனத்திற்கு!

இந்த நிகழ்ச்சி (மே 8) இன்றிலிருந்து ஒளிபரப்பாக உள்ளது.அதன்படி இனி ஞாயிறு தோறும் இரவு 7.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும். இந்த புரோமோவில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் உள்ள பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பிரியங்கா – ராஜு, இசைவாணி- வேல்முருகன், ஜக்கி – தேவ், அபிஷேக்- சுருதி, அமீர் – பாவ்னி, ஹாரதி -கணேஷ், சுஜா- சிவகுமார், தாமரை – பார்த்தசாரதி, மற்றும் இவர்களுடன் டேனியும் இணைந்துள்ளார். இந்த பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 5’இல் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மட்டுமில்லாமல் மற்ற சீசன்களிலும் கலந்து கொண்ட சிலரும் உள்ளனர்.

இந்த புரோமோ வெளியானத்திலிருந்து, பலரும் அமீர் மற்றும் பாவ்னி ஜோடி பற்றி தான் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அங்கேர் பிரியங்கா லைவ் ஷோவ்வில், அமீர்-பாவ்னியை கலாய்த்து சில கமெண்ட்களை ஷேர் செய்து உள்ளது. அதாவது இந்த பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சி அமீர்-பாவ்னிக்காக தான் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இந்த நிகழ்ச்சி முடிவதற்குள் நீக்க கல்யாணம் பண்ணிப்பிங்களா, இல்ல எங்கேஜ்மெண்ட் பண்ணிப்பிங்களா, இல்ல பிரேக்அப் பண்ணிப்பிங்களா என அமீர்-பாவ்னியிடம் பிரியங்கா கேட்கிறார். அதற்கு அமீர் நான் நிறைய எதிர்பார்ப்பில் உள்ளேன், ஆனால் பாவ்னி என்ன எதிர்பார்ப்புல இருக்கான்னு தெரியல என கூறுகிறார். இதற்கு பதில் அளித்த பாவ்னி நான் அமீர்க்கு ராக்கி கட்ட போரே, இல்ல FRIENDSHIP கயிறு கட்ட போறே என பதில் அளித்துள்ளார். இதனால் பிரியங்காவும், அமீர் சாக் ஆகிவிட்டனர். இந்நிலையில் ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here