Airtel நிறுவனம் வழங்கும் சிறப்பு சலுகைகள் – முழு விபரம் இதோ!

0
Airtel நிறுவனம் வழங்கும் சிறப்பு சலுகைகள் - முழு விபரம் இதோ!
Airtel நிறுவனம் வழங்கும் சிறப்பு சலுகைகள் - முழு விபரம் இதோ!
Airtel நிறுவனம் வழங்கும் சிறப்பு சலுகைகள் – முழு விபரம் இதோ!

ஏர்டெல் நிறுவனம் பயனர்களுக்கு பல்வேறு சிறப்பான திட்டங்களை வழங்கி வருகிறது. அதனை தொடர்ந்து ரூ.119க்கான டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல்:

கொரோனா காலத்தில் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடைக்கும் சூழல் உருவானதால் இன்டர்நெட் பயன்படுத்தும் விகிதம் அதிகமாகியுள்ளது. எனவே முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு சலுகைகளை வழங்கி வருகிறது. 28 நாட்களுக்கான சலுகைகள் முதல் 365 நாட்களுக்கு சலுகைகள் வரை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் புதிய மலிவு 4ஜி டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரே நேரத்தில் 4 சாதனங்களை இணைக்கும் வாட்ஸ்அப்-ன் புதிய அம்சம் – என்னென்ன ஸ்பெஷல்!

தற்போது வாடிக்கையாளர்களுக்கு ரூ.98, ரூ.89 மற்றும் ரூ.48 ஆகிய 4ஜி டேட்டா திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரூ.98க்கு டேட்டா வவுச்சர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வாடிக்கையாளர்கள் கொண்டிருக்கும் அன்லிமிடெட் பேக் முடியும் வரை செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் 12GB டேட்டா வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ரூ.89 க்கான டேட்டா திட்டத்தில் 6GB டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது தற்போது வாடிக்கையாளர்கள் கொண்டிருக்கும் அன்லிமிடெட் பேக் முடியும் வரை செல்லுபடியாகும் என குறிப்பிடப்படுகிறது. மேலும் பயனர்களுக்கு ஒரு மாதத்திற்கு அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஹலோ டியூன் மற்றும் விங்க் மியூசிக் வழங்கப்படுகிறது.

தமிழக ஊர்க்காவல் படை தேர்வு மற்றும் பணிகள் – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

ரூ.48 க்கான டேட்டா திட்டத்தில் 3GB டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 48 வவுச்சர் முழுமையான செல்லுபடியை வழங்குகிறது. அதனை தொடர்ந்து தற்போது ரூ. 119 க்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 15 GB டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் எக்ஸ்ஸ்ட்ரீம் மொபைல் பேக்கின் நன்மை 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் என கோரப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!