ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – இதை செய்தால் புதிய அட்டையை பெறலாம்!

0
ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - இதை செய்தால் புதிய அட்டையை பெறலாம்!
ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - இதை செய்தால் புதிய அட்டையை பெறலாம்!
ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – இதை செய்தால் புதிய அட்டையை பெறலாம்!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவு மற்றும் நுகர்வோர் விநியோகத் துறையால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் முக்கிய ஆவணம் ரேஷன் கார்டு ஆகும். முக்கிய ஆவணமான ரேஷன் கார்டு தொலைந்து போனால், உங்கள் கையில் செல்போன் இருந்தால் போதும் 20 நிமிடத்தில் பெற்றுக்கொள்ளலாம். இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

முக்கிய அறிவிப்பு:

நாட்டில் உள்ள அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் உதவுவதற்காக தேசிய பொருள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் மற்ற உணவுப் பொருட்களும் மலிவு விலையில் ரேஷன் கடைகளின் வாயிலாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நிதி உதவி போன்ற பல்வேறு உதவிகள் ரேஷன் கார்டு மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு என்பது இந்திய குடிமகனின் முக்கியமான ஒரு ஆவணமாக கருதப்படுகிறது. இந்த ரேஷன் கார்டு விஷயத்தில் நிறைய விதிமுறைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. தகுதியானவர்களுக்கு ரேஷன் உதவி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது.

ட்விட்டரை சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்கிய எலோன் மஸ்க் – புதிய மாற்றங்களை ஏற்படுத்த முயற்சி!

ரேஷன் கார்டில் மோசடி நடைபெறுவதைத் தடுக்க, ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் ஆதார் எண்ணை ரேஷன் கார்டுடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதியோடு முடிந்து விட்ட நிலையில், நிறையப் பேர் இணைக்காமல் இருந்தனர். எனவே இதற்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரேஷன் கார்டை நம் கவனக்குறைவால் தொலைத்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் நாம் குழப்பத்தில் இருப்போம். யாரிடம் கேட்பது, என்ன செய்வது, எப்படி திரும்ப வாங்குவது என பலவிதமாக யோசிப்போம். ஆனால் இதற்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் புதிய ரேஷன் அட்டை நகலை ஆன்லைனில் எளிமையாக விண்ணப்பித்து வாங்கலாம். மேலும்

  • நீங்கள்  முதலில் https://www.tnpds.gov.in/ என்ற வெப்சைட்டில் செல்ல வேண்டும். உள்ளே சென்றதும் உங்கள் பயனாளர் IDஐ பதிவிட வேண்டும்.
  • பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அதை பதிவு செய்து சுயவிவர பக்கத்தில் உள்நுழைய வேண்டும்.
  • இப்போது TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான பக்கம் ஓப்பன் ஆகும்.
  • அதில் கேட்கப்படும் விவரங்களை உள்ளிட்டு அந்த படிவத்தை PDF வடிவில் சேமித்து அதை டவுன்லோட் செய்ய வேண்டும்.
  • இந்த பிடிஎப் படிவத்தை பிரிண்ட் எடுத்து உங்கள் ரேஷன் அட்டைக்கு உட்பட்ட பகுதிக்கு இருக்கும் உணவு வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால், மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!