ட்விட்டரை சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்கிய எலோன் மஸ்க் – புதிய மாற்றங்களை ஏற்படுத்த முயற்சி!

0
ட்விட்டரை சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்கிய எலோன் மஸ்க் - புதிய மாற்றங்களை ஏற்படுத்த முயற்சி!
ட்விட்டரை சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்கிய எலோன் மஸ்க் - புதிய மாற்றங்களை ஏற்படுத்த முயற்சி!
ட்விட்டரை சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்கிய எலோன் மஸ்க் – புதிய மாற்றங்களை ஏற்படுத்த முயற்சி!

உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை வகித்திருக்கும் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலோன் மஸ்க் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரை சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ட்விட்டர் வலைதளம்

இன்றைய கால கட்டத்தில் சமூக வலைதளத்தை உபயோகிக்காதவர்களை பார்ப்பது என்பது மிகவும் அரிதான காரியம். ஏனென்றால் தற்போதுள்ள தொழில்நுட்ப உலகில் இந்த சமூக வலைதளங்கள் ஒரு முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தொழில்நுட்ப உலகின் மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றான ட்விட்டர் வலைதளம் தற்போது கை மாற்றப்பட்டுள்ளது. உலகில் உள்ள அத்தனை தலைவர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள் கணக்கு வைத்திருக்கக் கூடிய ஒரு சமூக வலைதளமான ட்விட்டர் இப்போது உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை வகித்திருக்கும் எலோன் மஸ்க்குக்கு சொந்தமாகி இருக்கிறது.

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வோர் கவனத்திற்கு!

அதாவது, சுமார் $44 பில்லியனுக்கு $54.20 மதிப்புள்ள பங்குகளுடன் ட்விட்டரின் கட்டுப்பாட்டை எலோன் மஸ்க் எடுத்துள்ளார். இது குறித்த அறிவிப்பை ஏப்ரல் 14 அன்று வெளியிட்ட மஸ்க், ‘சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகத்தின் அடித்தளமாகும். ட்விட்டர் என்பது மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படும் டிஜிட்டல் டவுன் சதுக்கமாகும். புதிய அம்சங்களுடன் தயாரிப்பை மேம்படுத்துவதன் மூலமும், நம்பிக்கையை அதிகரிக்க அல்காரிதங்களை ஓப்பன் சோர்ஸாக மாற்றுவதன் மூலமும், அனைவரையும் அங்கீகரிப்பதன் மூலமும் ட்விட்டரை சிறந்ததாக்க விரும்புகிறேன்.

Exams Daily Mobile App Download

சமூக வலைதளங்களில் ட்விட்டர் மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது. அதைத் திறக்க நிறுவனம் மற்றும் பயனர்களின் சமூகத்துடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்’ என்று தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனம், டெஸ்லா இணை நிறுவனருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது எலோன் மஸ்க் ட்விட்டரை தனக்கு சொந்தமாக்கி இருக்கிறார். இதனுடன், முதற்கட்டமாக ட்விட்டர் செயலியில் எடிட் பொத்தானை அறிமுகப்படுத்தும் முயற்சியிலும் அவர் இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!