தமிழகத்தில் பொது மக்களுக்கான புதிய வசதிகள் – முதல்வர் துவக்கி வைப்பு!

0
தமிழகத்தில் பொது மக்களுக்கான புதிய வசதிகள் - முதல்வர் துவக்கி வைப்பு!
தமிழகத்தில் பொது மக்களுக்கான புதிய வசதிகள் - முதல்வர் துவக்கி வைப்பு!
தமிழகத்தில் பொது மக்களுக்கான புதிய வசதிகள் – முதல்வர் துவக்கி வைப்பு!

தமிழகத்தில் குற்ற நிகழ்விடத்திலேயே ஆரம்பகட்ட ஆய்வு மேற்கொள்ள 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்கள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இன்று முதல் தமிழக முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தடய அறிவியல் வாகனங்கள்

தமிழகத்தில் சென்னையில் தடய அறிவியல் துறையின் தலைமை ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து வட்டார தடய அறிவியல் ஆய்வகங்கள் கோயம்புத்தூர், மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, சேலம், வேலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம் மற்றும் தருமபுரி ஆகிய 10 இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள தலைமை ஆய்வகம் மானுடவியல், துப்பாக்கியில், உயிரியல், வேதியியல், கணினி தடயவியல், மரபணுவியல், ஆவணம், வெடிபொருள், கலால், போதைப்பொருள், இயற்பியல், மதுவிலக்கு, குருதி வடிநீரியல் மற்றும் நஞ்சியியல் உள்ளிட்ட 14 வகையான ஆய்வுப் பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

கடந்த 6 மாத காலமாக இத்துறையின் தலைமை ஆய்வகத்தில் உள்ள அறிவியல் சார் மனிதவளம், உட்கட்டமைப்பு மற்றும் ஆய்வகத்தின் பல்வேறு தர ஆவணங்களை பிற மாநில தடய அறிவியல் வல்லுநர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இதன் முடிவில் தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் தலைமை ஆய்வகத்திற்கு சர்வதேச தரச் சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தில் 14 நடமாடும் தடய அறிவியல் ஆய்வக வாகனங்கள் ரூ.3,92,70,000 செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்கள் சென்னை, திருச்சிராப்பள்ளி, திருப்பூர் மாநகர ஆணையரகங்கள், வேலூர், தர்மபுரி, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, நீலகிரி, மதுரை, விழுப்புரம், இராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, இந்த நடமாடும் வாகனங்கள் மூலமாக குற்றம் நடைபெறும் இடத்தில் உடனடியாக இரத்தக்கறை, வெடிபொருள், போதைப்பொருள், துப்பாக்கிச்சூட்டின் படிமங்கள் உள்ளிட்டவைகளை அடையாளம் காண ஏதுவாக கருவிகளை கொண்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here