IOCL நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் LPG சிலிண்டர் அறிமுகம் – முழு விபரம் இதோ!

0
IOCL நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் LPG சிலிண்டர் அறிமுகம் - முழு விபரம் இதோ!
IOCL நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் LPG சிலிண்டர் அறிமுகம் - முழு விபரம் இதோ!
IOCL நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் LPG சிலிண்டர் அறிமுகம் – முழு விபரம் இதோ!

IOCL நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக காம்போசிட் சிலிண்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த வகை சிலிண்டரின் சிறப்பம்சம் மற்றும் விலை குறித்த விபரங்களை இப்பதிவில் காணலாம்.

காம்போசிட் சிலிண்டர்:

மக்களின் அத்தியாவசிய தேவைகளில் சிலிண்டர் முக்கிய பங்கு வகித்து வருகிறது. தற்போது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தனது வாடிக்கையாளர்களுக்காக காம்போசிட் சிலிண்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இது லைட் வெயிட் மற்றும் துருப்பிடிக்காத தன்மை போன்ற பல சிறப்பம்சங்களை கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் காம்போசிட் சிலிண்டர் மூலம் எவ்வளவு எரிவாயு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள் – அமைச்சர் அறிவிப்பு!

ப்ளோ-மோல்டட் ஹை-டென்சிட்டி பாலிஎதிலீன் மூலம் முதல் அடுக்கு இன்னர் லேயர் பாலிமர்ஸால் செய்யப்பட்ட ஃபைபர்கிளாஸ் கோட்டிங் உடன் எக்ஸ்டர்னல் லெவல் HDPE ஆல் அவுட்டர் ஜாக்கெட்டால் மூன்றாவது அடுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வகை சிலிண்டர்கள் சாதாரண சிலிண்டரை காட்டிலும் குறைவான எடையில் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த வகை சிலிண்டர்கள் 5 கிலோ மற்றும் 10 கிலோ எடையில் கிடைக்கிறது.

அக்டோபர் மாதத்தில் 21 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை – முழு பட்டியல் வெளியீடு!

அகமதாபாத், அஜ்மீர், அலகாபாத், பெங்களூரு, புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, கோயம்புத்தூர், டார்ஜிலிங், டெல்லி, ஃபரிதாபாத், குருகிராம், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜலந்தர், ஜாம்ஷெட்பூர், லூதியானா, மைசூர், பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, சங்ரூர், சூரத், திருச்சிராப்பள்ளி, திருவள்ளூர், தும்கூர், வாரணாசி மற்றும் விசாகப்பட்டினம் உள்ளிட்ட நாட்டின் 28 நகரங்களில் பயன்பாட்டில் இருந்து வரும் இந்த வகை சிலிண்டர்கள் விரைவில் பிற நகரங்களிலும் விற்பனைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. 10 கிலோ எடை கொண்ட எல்பிஜி காம்போசிட் சிலிண்டருக்கு ரூ.3,350 டெபாசிட் செய்ய வேண்டும். அதேபோல் 5 கிலோ எடை கொண்ட காம்போசிட் சிலிண்டருக்கு ரூ. 2,150 டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!