அக்டோபர் மாதத்தில் 21 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை – முழு பட்டியல் வெளியீடு!

0
அக்டோபர் மாதத்தில் 21 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை - முழு பட்டியல் வெளியீடு!
அக்டோபர் மாதத்தில் 21 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை - முழு பட்டியல் வெளியீடு!
அக்டோபர் மாதத்தில் 21 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை – முழு பட்டியல் வெளியீடு!

தற்பொழுது துவங்கியிருக்கும் அக்டோபர் மாதத்தில் கிட்டத்தட்ட 21 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என ரிசர்வ் வங்கி (RBI) தனது வருடாந்தர நாட்காட்டியில் குறிப்பிட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை விரைந்து நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

வங்கி விடுமுறை

பொதுவாக ஒவ்வொரு மாதத்திலும் வார இறுதி விடுமுறை, பண்டிகை விடுமுறை என கிட்டத்தட்ட 7 நாட்களுக்காவது வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படுவது உண்டு. இது தவிர ஒரு மாதத்தில் பண்டிகை நாட்கள் வந்தால் கூடுதலாக சில நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும். அந்த வகையில் தற்போது புதிதாக துவங்கியுள்ள அக்டோபர் மாதத்தில் கிட்டத்தட்ட 21 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் வார இறுதி விடுமுறை, பண்டிகை விடுமுறை என அனைத்தும் பொருந்தும்.

TN TRB தகுதித் தேர்வு – சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு! முதல்வரிடம் கோரிக்கை!

குறிப்பாக அக்டோபர் மாதத்தில் 14ம் தேதி முதல் தொடர்ச்சியாக 4 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பல்வேறு மாநிலங்களில் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் வேறுபடுகின்றன. இப்போது அக்டோபர் மாதத்தில் வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை மேற்கொள்வதற்கு முன்னதாக வங்கிகள் மூடப்படும் முக்கியமான நாட்களின் பட்டியலை தெரிந்து கொள்வது அவசியமாகும். அந்த வகையில்,

  • அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பொது விடுமுறை.
  • அக்டோபர் 3 – ஞாயிறு, பொது விடுமுறை.
  • அக்டோபர் 6 – மஹாளய அமாவாஸ்யே தினத்தன்று மேற்கு வங்கம், திரிபுரா, கர்நாடகா மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது.
  • அக்டோபர் 7 – லைனிங்தோ சனமஹி தினத்தன்று திரிபுரா, மேற்கு வங்கம், மேகாலயா மாநிலங்களில் வங்கிகள் அடைக்கப்படும்.
  • அக்டோபர் 9 – 2 வது சனிக்கிழமை, பொது விடுமுறை.
  • அக்டோபர் 10 – ஞாயிறு, பொது விடுமுறை.
  • அக்டோபர் 12 – துர்கா பூஜையை முன்னிட்டு மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.

தமிழக அரசு அறிவித்த 5000 ரூபாய் சம்பள உயர்வு – ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்!

  • அக்டோபர் 13 – துர்கா பூஜையை முன்னிட்டு மேற்கு வங்கம், சிக்கிம், பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மணிப்பூர், திரிபுரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
  • அக்டோபர் 14 – தசரா பண்டிகை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், திரிபுரா, தமிழ்நாடு, சிக்கிம், புதுச்சேரி, ஒடிசா, நாகாலாந்து, மேகாலயா, கேரளா, கர்நாடகா, ஜார்க்கண்ட், பீகார், அசாம் மாநிலங்களில் வங்கிகள் அடைக்கப்படும்.
  • அக்டோபர் 15 – துர்கா பூஜை, தசரா, விஜய தஷமி காரணமாக மணிப்பூர், இமாச்சல பிரதேசம் தவிர மற்ற மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது.
  • அக்டோபர் 16 – துர்கா பூஜையை முன்னிட்டு சிக்கிம் பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை.
  • அக்டோபர் 17 – ஞாயிறு, பொது விடுமுறை.
  • அக்டோபர் 18 – கதி பிஹு காரணமாக அசாம் மாநிலத்தில் வங்கிகள் மூடப்படும்.
  • அக்டோபர் 19 – நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரகண்ட், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, ஜம்மு, காஷ்மீர், உத்தரபிரதேசம், கேரளா, டெல்லி, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் வங்கிகள் அடைக்கப்படும்.
  • அக்டோபர் 20 – மகரிஷி வால்மீகியின் பிறந்த நாள், லட்சுமி பூஜை காரணமாக திரிபுரா, பஞ்சாப், மேற்கு வங்கம், கர்நாடகா, ஹரியானா, இமாச்சல பிரதேசத்தில் வங்கிகள் அடைக்கப்படும்.
  • அக்டோபர் 22 – ஈத்-இ-மீலாத்-உல்-நபியை முன்னிட்டு ஜம்மு காஷ்மீர் பகுதியில் வங்கிகள் மூடப்படும்.
  • அக்டோபர் 23 – 4 வது சனிக்கிழமை, பொது விடுமுறை.
  • அக்டோபர் 24 – ஞாயிறு, பொது விடுமுறை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!