டிச.10 முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அமைச்சரவையில் இன்று முக்கிய முடிவு!

0
டிச.10 முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அமைச்சரவையில் இன்று முக்கிய முடிவு!
டிச.10 முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அமைச்சரவையில் இன்று முக்கிய முடிவு!
டிச.10 முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அமைச்சரவையில் இன்று முக்கிய முடிவு!

கர்நாடகா மாநிலத்தில் தற்போதைய கொரோனா தொற்றின் நிலைமையை ஆய்வு செய்து வரும் அரசு புதிய கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை விதிப்பது தொடர்பாக இன்று (டிச.9) நடைபெற இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று

கடந்த வாரங்களாக கர்நாடகா மாநிலத்தின் சில முக்கிய பகுதிகளில் புதிய கொரோனா வழக்குகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், அரசு விரைவில் புதிய நோய் தடுப்பு வழிகாட்டுதல்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதாவது கர்நாடகா மாநிலம் முழுவதும் புதிய கொரோனா வழக்குகள் அதிகரித்து வரும் பட்சத்தில் புதிய நோய் தடுப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து இன்று (டிச.10) நடைபெறும் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே வங்கியில் அனுமதி – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

கர்நாடகாவில் ஓமிக்ரான் மாறுபாடு மற்றும் கொரோனா 2ம் அலைத்தொற்றில் முன்னேற்றங்கள் ஏற்படுவது தொடர்பாகவும், புதிய வழிகாட்டுதல்களை வெளியிடுவது குறித்தும் முடிவு எடுக்க அமைச்சர்கள் கலந்து கொள்ளும் முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று (டிச.9) நடைபெற்று வருகிறது. இப்போது கொரோனா வழக்குகள் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே காணப்படுகிறதாகவும், மற்ற இடங்களில் அது கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அம்மாநில முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இப்போது புதிய கொரோனா வழிகாட்டுதல்களைப் பற்றிப் பேசுகையில், ஏதேனும் புதிய வழிகாட்டுதல்களை கொண்டுவர வேண்டும் என்று அரசு திட்டமிட்டால் அது முழு மாநிலத்திற்கும் இருக்க வேண்டும் என்றும், பள்ளிகள் மற்றும் விடுதிகளில் கொரோனா வழக்குகள் தோன்றினாலும், மாநில மக்கள் பீதியடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயமாக இரட்டை டோஸ் தடுப்பூசி எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

FD கணக்குகளுக்கு அதிக வட்டி தரும் தனியார் வங்கிகள் – முக்கிய விவரங்கள் இதோ!

தொடர்ந்து கர்நாடகாவில், கொரோனா தொற்று நோயின் இரண்டாவது அலையின் போது, பெங்களூரு, மைசூர், ஷிவமொக்கா, ஹுப்பள்ளி, மங்களூரு மற்றும் விஜயபுராவில் ஆறு மரபணு வரிசை ஆய்வகங்களை அமைத்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தவிர, கர்நாடகாவில் நேற்று (டிச.8) ஒரு நாளில் 299 புதிய கொரோனா வழக்குகள் மற்றும் ஆறு இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இதன் மூலம் மாநிலத்தின் மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 29,98,699 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29,53,327 ஆகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!