FD கணக்குகளுக்கு அதிக வட்டி தரும் தனியார் வங்கிகள் – முக்கிய விவரங்கள் இதோ!

0
FD கணக்குகளுக்கு அதிக வட்டி தரும் தனியார் வங்கிகள் - முக்கிய விவரங்கள் இதோ!
FD கணக்குகளுக்கு அதிக வட்டி தரும் தனியார் வங்கிகள் - முக்கிய விவரங்கள் இதோ!
FD கணக்குகளுக்கு அதிக வட்டி தரும் தனியார் வங்கிகள் – முக்கிய விவரங்கள் இதோ!

மக்கள் அதிகமாக தங்கள் பணத்தை FD கணக்குகளில் தான் பாதுகாப்பாக வைக்க நினைக்கின்றனர். அந்த வகையில், FD பணத்திற்கு அதிக வட்டி தரும் தனியார் வங்கிகளை பற்றிய முக்கிய விவரங்களை இந்த பதிவில் காண்போம்.

அதிக வட்டி விகிதம்:

அதிக அளவிலான மக்கள் தங்கள் முதலீடுகளுக்கு பாதுகாப்பை மட்டுமே பிரதானமாக நினைக்கின்றனர். சில அதிக வட்டியை எதிர்பார்க்கின்றனர். நிலையான வைப்பு நிதி கணக்கில் ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட அளவிலான வட்டியை நிர்ணயிக்கிறது. வங்கிகள் தங்களது திட்டங்களுக்கான கால அளவு முதல் சில வரைமுறைகளையும் வகுத்துள்ளனர். இவற்றில் மக்களுக்கு எவை வசதியாக உள்ளதோ அவற்றை தேர்வு செய்து கொள்ளலாம். நிலையான வைப்பு நிதி கணக்குகளுக்கு சில வங்கிகளில் வரிச்சலுகையும் உள்ளது. இதனால் மக்கள் FD கணக்குகளில் முதலீடு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் டிச.14 உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!

வரிச்சலுகை டெபாசிட்களுக்கான தனியார் வங்கிகள் குறித்து இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் RBL வங்கி, வரிச்சலுகைக்கான பிக்சட் டெபாசிட்களின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். இதற்கு முன்னதாக பணத்தை பெற முடியாது. இதில், ரூ.1.5 லட்சம் வரையிலுமான முதலீடுகளுக்கு வரிச்சலுகை பெற முடியும். FD கணக்குகளுக்கு 6.30% வட்டி வழங்குகிறது. ரூ.1.5 லட்சம் டெபாசிட் செய்தால் 5 ஆண்டுகளில் ரூ.2.05 லட்சமாக அது அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதே போல், யெஸ் வங்கியில் வரிச்சலுகை டெபாசிட்களுக்கு 6.25% வட்டி வழங்கப்படுகிறது. ரூ.1.5 லட்சம் டெபாசிட் செய்தால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.2.05 லட்சம் கிடைக்கும்.

தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – அரசு எச்சரிக்கை!

IDFC First Bank மற்றும் IndusInd Bankகளில் 6% வரை வட்டி வரிச்சலுகை கொண்ட டெபாசிட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.1.5 லட்சம் டெபாசிட் செய்தால் 5 ஆண்டுகள் சென்று ரூ.2.02 லட்சம் கிடைக்கும். இதேபோல், DCB வங்கியில் 5.95% வட்டி வரிச்சலுகை கொண்ட டெபாசிட்களுக்கு வழங்கப்படுகிறது. ஆக்சிஸ் வங்கி மற்றும் கரூர் வைஸ்யா வங்கியில் வரிச்சலுகை கொண்ட டெபாசிட்களுக்கு 5.75% வட்டி வழங்கப்படுகிறது. ரூ.1.5 லட்சம் டெபாசிட் செய்தால் அது 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் இதுபோன்ற வரிச்சலுகை உள்ள கணக்குகளில் அதிக வட்டி தரும் வங்கிகளை ஆராய்ந்து பயனடைந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!