மாநிலம் முழுவதும் நடமாடும் ரேஷன் கடைகள் அறிமுகம் – அரசின் புதிய பட்ஜெட் அம்சங்கள்!

0
மாநிலம் முழுவதும் நடமாடும் ரேஷன் கடைகள் அறிமுகம் - அரசின் புதிய பட்ஜெட் அம்சங்கள்!
மாநிலம் முழுவதும் நடமாடும் ரேஷன் கடைகள் அறிமுகம் - அரசின் புதிய பட்ஜெட் அம்சங்கள்!
மாநிலம் முழுவதும் நடமாடும் ரேஷன் கடைகள் அறிமுகம் – அரசின் புதிய பட்ஜெட் அம்சங்கள்!

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக சில திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ள மாநில அரசு, நடமாடும் ரேஷன் கடைகளை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

ரேஷன் கடைகள்:

கேரளத்தில் தற்போது முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தற்போது மாநில சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் வருவாயை அதிகரிப்பது, பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது, பெருகிவரும் கடன்களை சமாளிப்பது போன்றவற்றுக்கு மத்தியில் வரும் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் தாக்கல் செய்ய இருக்கிறார். இப்போது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், ‘கேரளாவின் வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட் தொகை மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

TNPSC தேர்வர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சி!

இந்த பட்ஜெட் பணவீக்கத்தை சமாளிப்பதற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் மீது சுமையை திணிப்பதற்காக அல்ல’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் கேரளா அரசு தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்களை இப்போது காணலாம். இதில் முதலாவதாக விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

அதே நேரத்தில், உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்திடமிருந்து (KIIFB) பல்கலைக்கழகங்களுக்கு ரூ.200 கோடி, தொழில்துறை பூங்காக்கள் அமைக்க ரூ.200 கோடி, திருவனந்தபுரம் வெளிவட்ட சாலைக்கு KIIFB லிருந்து ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், உலக அமைதியை உறுதி செய்வதற்கான கருத்தரங்குகளுக்கு ரூ.2 கோடி, ஸ்டார்ட் அப் மிஷனுக்கு ரூ.90 கோடி, மின்னணு மையத்துக்கு ரூ.28 கோடி, திறன் பூங்காக்கள் அமைக்க ரூ.350 கோடி, IT பணிக்கு ரூ.127 கோடி, டிஜிட்டல் பல்கலைக்கழகத்துக்கு ரூ.26 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

DRDO நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

மேலும், மருத்துவ கண்டுபிடிப்பு ஆய்வகத்திற்கு ரூ.100 கோடி அறிவிப்பு, கிராஃபீன் ஆராய்ச்சிக்கு 15 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். வேளாண் துறைக்கு ரூ.851 கோடி, நெல் ஆதரவு திட்டங்களுக்கு ரூ.76 கோடி, தென்னை வளர்ச்சிக்கு ரூ.73 கோடி, நுண்ணீர் பாசன திட்டங்களுக்கு ரூ.100 கோடி, அணைகளில் தூர்வாருவதற்கு ரூ.10 கோடி, உள்ளூர் நிர்வாகக் கழகத்திற்கு ரூ.33 கோடி, கடலோர பாதுகாப்புக்கு ரூ.100 கோடி, இரண்டாவது குட்டநாடு தொகுப்புக்கு ரூ.140 கோடி, சபரிமலை மாஸ்டர் பிளானுக்கு ரூ.30 கோடி, சுற்றுச்சூழல் சுற்றுலா வளர்ச்சிக்கு ரூ.10 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் நடமாடும் ரேஷன் கடைகளை அறிமுகப்படுத்த பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!