ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்? இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

0
ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்? இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

ஒவ்வொரு ரயில் பயணியின் டிக்கெட்டிலும் பொறிக்கப்பட்டிருக்கும் குறியீடு குறித்த முக்கிய விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட்:

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பயணிகளுக்கு கூடுதல் வசதியினை வழங்கும் பொருட்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், பொதுவாக ரயில் டிக்கெட்டில் ஒவ்வொரு பயணிகளுக்கும் தனித்தனியாக 13 வகையான குறியீடுகள் பொறிக்கப்பட்டிருக்கும். தற்போது ஒவ்வொரு குறியீட்டிற்குமான விளக்கத்தை தற்போது காணலாம். முதலாவதாக PNR என்பது Passenger Name Record. இந்த பத்து இலக்க எண் மூலமாக பயணிகளின் தகவல் மற்றும் டிக்கெட் முன்பதிவுகளை கண்காணித்துக் கொள்ளலாம். அதாவது, உங்களது டிக்கெட்டில் GNWL ( General Waiting List) என்று பொறிக்கப்பட்டிருந்தால் உறுதி செய்யப்பட்ட பெர்த் உங்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

பெண்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கும் மத்திய அரசு – விண்ணப்ப வழிமுறைகள்!

அதைப்போல, டிக்கெட்டில் WL(Waiting List) என்று பொறிக்கப்பட்டிருந்தால் உறுதிப்படுத்தப்பட்ட பெர்த் வழங்கப்படாது. மீதமுள்ள பயணிகள் டிக்கெட்களை ரத்து செய்வதை பொருத்தே உங்களுக்கான சீட் வழங்கப்படும். அடுத்ததாக, டிக்கெட்டில் RAC ( Reservation Against Cancellation) என்று குறிப்பிடப்பட்டிருந்தால் பயணிகள் மற்றொரு RAC பயணியுடன் பெர்த்தை பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். அடுத்தவராக TQWL (Tatkal Waiting List) என்று குறிப்பிட்டு இருந்தால் பிற பயணிகள் ரயில் டிக்கெட்டை ரத்து செய்யும் பட்சத்தில் உங்களுக்கான இருக்கை உறுதி செய்யப்படலாம். இதுபோல ஒவ்வொரு ரயில் பயணியின் டிக்கெட்டிலும் ஒரு குறியீடு இருக்கும். அதனை பொறுத்து ரயில் பயணிகளுக்கு இருக்கைகள் உறுதி செய்யப்படும்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!