திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு – இன்று தரிசன டிக்கெட் வெளியீடு!

0
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு - இன்று தரிசன டிக்கெட் வெளியீடு!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு - இன்று தரிசன டிக்கெட் வெளியீடு!
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு சூப்பர் அறிவிப்பு – இன்று தரிசன டிக்கெட் வெளியீடு!

திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கான விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் இன்று மாலை 3 மணி அளவில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி:

ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் கொரோனா தொற்று முழுமையாக குறையாத நிலையில் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய செய்ய வேண்டும். இதற்காக மாதந்தோறும் 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது. முன்பதிவு அடிப்படையில் தினசரி 50,000 பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் அனுமதி வழங்கி வருகிறது.

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் இல்லை – பொதுமக்கள் ஏமாற்றம்!

மேலும் புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் கூடுதல் டிக்கெட் விற்பனை செய்யவுள்ளதாவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தற்போது வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பையொட்டி 2022 ஜனவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் டிசம்பர் 24ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியிட்ட 20 நிமிடங்களில் சுமார் 4.52 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது. அதனை தொடர்ந்து இன்று மாலை 3 மணி அளவில் ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கான விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் 2022 – தேர்வாணையத்தின் முக்கிய அறிவிப்பு!

ஜனவரி 13ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று 1,000 மகா லகு தரிசனம் டிக்கெட்களும், 14 முதல் தினசரி 2,000 லகு தரிசனம் டிக்கெட்களும் வெளியிடப்பட உள்ளன. மேலும் ஜனவரி 13, 14 ஆகிய நாட்களை தவிர்த்து நாள்களில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 200 டிக்கெட்டுகளும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 300 டிக்கெட்களும் முன்பதிவில் வைக்கவுள்ளனர். நேற்று காலை வெளியிடப்பட்ட சர்வ தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டு சில நிமிடங்களில் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்ய முயன்றதால் 15 நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here