தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் இல்லை – பொதுமக்கள் ஏமாற்றம்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் இல்லை - பொதுமக்கள் ஏமாற்றம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் இல்லை - பொதுமக்கள் ஏமாற்றம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் இல்லை – பொதுமக்கள் ஏமாற்றம்!

தமிழக அரசால் 2022ம் ஆண்டின் பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத்தொகுப்பில் ரொக்கப்பணம் கிடையாது என்று கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஏமாற்றத்தில் மக்கள்:

தமிழகத்தில் தை திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் வருடம் தோறும் வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வரும் ஜனவரி 3ம் தேதி ரேஷன் கடை மூலம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்‌ மற்றும்‌ இலங்கைத்‌ தமிழர்‌ மறுவாழ்வு முகாம்களில்‌ வசிக்கும் குடும்பங்களுக்கும்‌ வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் பரிசுத் தொகுப்பில் பொங்கல் வைப்பதற்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் மளிகை உட்பட ஆகிய 21 வகையான பொருட்கள் அடங்கியுள்ளன. இந்த பரிசு பொருட்களுடன் முதலில் முழுக்கரும்பு இடம் பெறவில்லை. பின்பு எதிர் கட்சிகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டது என்பது நாம் அறிந்தவை.

TNPSC குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் 2022 – தேர்வாணையத்தின் முக்கிய அறிவிப்பு!

இதன் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத்தொகையாக 2500 ரூபாய் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த வருடம் திமுக ஆட்சியில் கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் மக்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், நிதிப்பற்றாக்குறை காரணமாக பொங்கல் பரிசு பொருட்களுடன் ரொக்கப்பணம் இடம்பெறவில்லை என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். பின்பு இந்த அறிவிப்பு குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததது. அப்போது கூட்டுறவுத்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியானது. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் ரொக்கத்தொகை ரூ.1000 அல்லது ரூ.2000 என குறிப்பிடவில்லை.

தமிழகத்தில் டிச.31க்கு பிறகு முழு ஊரடங்கு உத்தரவு அமல்? மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கம்!

தற்போது பொங்கல் பரிசு தொடர்பாக கூட்டுறவுத்துறை புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட நிலையில், அதில் ரொக்கப்பணம் என்ற வார்த்தை நீக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்த வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணம் வழங்கப்படமாட்டாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து புதுச்சேரியில் இந்த வருடம் பொங்கல் பரிசு பொருட்களுடன் பணம் ரூ.1,000 வழங்கப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது. புதுச்சேரி ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்கும் திட்டம் 2022ம் ஆண்டிற்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு ரொக்கப்பணம் வழங்குவதை நிறுத்தியது ஏன்? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இந்த அறிவிப்பு பொது மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here