NEET UG கவுன்சிலிங் 2022 – செப்டம்பர் 25 முதல் தொடக்கம்!!

0
NEET UG கவுன்சிலிங் 2022 - செப்டம்பர் 25 முதல் தொடக்கம்!!
NEET UG கவுன்சிலிங் 2022 - செப்டம்பர் 25 முதல் தொடக்கம்!!
NEET UG கவுன்சிலிங் 2022 – செப்டம்பர் 25 முதல் தொடக்கம்!!

NEET UG கவுன்சிலிங் 2022 தேதிகள் MCC ஆல் அதிகாரப்பூர்வ இணையதளமான mcc.nic.in இல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. AIQ சேர்க்கைக்கான MCC NEET UG கவுன்சிலிங் செப்டம்பர் 25, 2022 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEET UG கவுன்சிலிங் 2022:

NEET தேர்வு முடிவுகள் 2022 இல் தகுதி பெற்ற மாணவர்கள், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கையைப் பெறுவதற்காக பல சுற்றுகளில் இந்த MCC NEET கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். மருத்துவ ஆலோசனைக் குழு, MCC மிக விரைவில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, NEET UG கவுன்சிலிங் 2022 அட்டவணையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MCC க்கு நெருக்கமான வட்டாரங்கள், “கவுன்சிலிங் பற்றிய அட்டவணை இன்னும் வெளியாகவில்லை, ஆனால் அதிகாரிகள் செப்டம்பர் 25 ஆம் தேதி கவுன்சிலிங்கைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர் என்றும், மேலும் இந்த தேதி இறுதி செய்யப்படவில்லை என்றும்” தெரிவிகின்றன.

மீண்டும் திறக்கப்படும் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த கனியாமூர் தனியார் பள்ளி – சீரமைப்பு பணி தொடக்கம்!

Exams Daily Mobile App Download

NEET UG கவுன்சிலிங் 2022 தொடங்கும் முன், விண்ணப்பதாரர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, தங்களின் அடிப்படை ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு சுற்றுக்குப் பிறகும், இட ஒதுக்கீடு முடிவு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. NEET UG கவுன்சிலிங் 2022 தேதிகள் பற்றிய அறிவிப்புக்காக நாடு முழுவதும் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் காத்திருக்கின்றனர். இந்த முறை, ஜூலை 17, 2022 அன்று நடைபெற்ற NEET UG தேர்வில் 17 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!