NEET PG 2024 தேர்வு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

0
NEET PG 2024 தேர்வு அறிவிப்பு வெளியீடு - ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஆரம்பம்!

தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் (NBE) ஆனது 2024 – 2025 ஆம் கல்வி ஆண்டுக்கான NEET PG 2024 நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் https://natboard.edu.in/ என்ற இணையதள முகவரி வாயிலாக 16.04.2024 அன்று முதல் 06.05.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. எனவே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் (NBE)
பணியின் பெயர் தேர்வின் பெயர்: NEET PG 2024
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.05.2024
விண்ணப்பிக்கும் முறை Online

NEET PG 2024 தேர்வு விவரங்கள்:

NEET PG 2024 நுழைவுத் தேர்வு மூலம் மருத்துவக் கல்லூரிகளில் MD, MS, PG Diploma, MDS, DrNB, DNB, NBEMS Diploma, DM, MCh ஆகிய படிப்புகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

இத்தேர்வு மூலம் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

  • இந்த NEET PG 2024 நுழைவுத் தேர்வுக்கு MBBS தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் General / OBC / EWS பிரிவை சேர்ந்தவராக இருப்பின் ரூ.3,500/- அல்லது
  • SC / ST / PWD பிரிவை சேர்ந்தவராக இருப்பின் ரூ.2,500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • இந்த NEET PG 2024 நுழைவுத் தேர்வானது 23.06.2024 அன்று நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

அரசு நிறுவனங்களில் சிசிடிவி கேமராக்கள் – வெளியான கட்டுப்பாடு!

இத்தேர்வானது கணினி வழித் தேர்வு முறையில் நடத்தப்படவுள்ளது.

  • இந்த NEET PG 2024 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் https://natboard.edu.in/ என்ற இணைப்பின் மூலம் ‘தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
  • இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 16.04.2024 அன்று முதல் 06.05.2024 அன்று வரை கால அவகாசமானது வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!