நீட் தேர்வு முடிவுகள் 2020

0
நீட் தேர்வின் முடிவுகள் 2020 இன்று வெளியீடு !!
நீட் தேர்வின் முடிவுகள் 2020 இன்று வெளியீடு !!

நீட் தேர்வு முடிவுகள் 2020

மருத்துவ நுழைவுத்தேர்வுகளான நீட் தேர்விற்கான தேர்வு முடிவுகள் தற்போது தளத்தில் வெளியாகியுள்ளது. மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த செப்டம்பர் 13ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. சுமார் 14,37,000 மாணவ மாணவிகள் இத்தேர்வை எழுதியிருந்தனர்.

வேலைவாய்ப்பு செய்திகள்

இத்தேர்வுக்கான விடைக்குறிப்பு அண்மையில் வெளியாகியிருந்தது. விடைக்குறிப்புகளை மாணவர்கள் சரிபார்த்து அதில் ஏதேனும் மாறுதல் இருந்தால் தகவல் தெரிவிக்க தேர்வர்களுக்கு தேசிய தேர்வு முகமை அவகாசம் வழங்கியிருந்தது. அதன்படி, நீட் தேர்வு முடிவுகள், மதிப்பெண் விவரம், கட் – ஆப் விவரம் உள்ளிட்டவை இன்று மாலைக்குள் வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே இத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளை ntaneet.nic.in என்ற இணையதளம் அல்லது nta.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் முடிவுகளை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பார் என்றும் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தங்களது தேர்வு முடிவை இன்று காணலாம்.

Check Result 2020 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!