தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் தேர்வு பயிற்சி – ரத்தாகுமா?
கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்கபடாத நிலையில் நீட் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு முறையாக நீட் பயிற்சி அளிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து நீட் தேர்வு குறித்த பல கேள்விகள் எழுந்து வருகிறது.
நீட் தேர்வு:
கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. அதனை தொடர்ந்து வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்தது. ஆன்லைன் வகுப்புகளில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்த நிலையில் 2ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டம் குறைக்கப்பட்டது. முன்னுரிமை அளிக்கப்படும் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், போட்டித் தேர்வுகளுக்கு இதனை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் தன்னிச்சையாக தயாராக வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உலகின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியல் – டிமார்ட் ராதாகிஷனுக்கு இடம்!
அரசு சார்பில் மாணவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் பயிற்சி அளிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் நீட் தேர்வு குறித்து எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பது எதிர்மறையாக உள்ளது என கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது மாணவர்கள் தாமாக தேர்வுக்கு தயாராக வேண்டும் என்ற அறிக்கை இனி நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுமா என்ற கேள்விகளை எழுப்பி வருகிறது.
TN Job “FB
Group” Join Now
கைவிட்ட போட்டி தேர்வு பயிற்சியினை மீண்டும் தொடர வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை போட்டித் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், அவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்திய மருத்துவ ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு அவசியம் என்பதால் நீட் பயிற்சி மாநில அரசு தொடர வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.